தகவல் - முஹம்மட் றிஸ்வான் (ஆசிரியர்)
சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தில் இறுதியாக சேவையாற்றி 30 வருட கால ஆசிரியர் சேவையின் பின்னர் ஓய்வு பெற்றுச் செல்லும் ஆசிரியர் T.J.பத்மபுவநேந்திரன் அவர்களுக்கான பிரியா விடை நிகழ்வு இன்று (2018-05-14) கல்லுாரி வளாகத்தில் பாடசாலை அதிபர் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் உரையாற்றிய பாடசாலை அதிபர் திரு. இஸ்மாயில் அவர்கள்,
ஆசிரியர் T.J.பத்மபுவநேந்திரன் அவர்கள் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தில் ஆசிரியராக பணியாற்றிய காலப்பகுதியில் அவரது சேவை மிகவும் பாராட்டப்பட கூடியதாகவிருந்ததாகவும், மாணவர்களோடு அன்பான முறையில் நடந்து கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் குறிப்பிட்டார்.
இந் நிகழ்வில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைவரும் ஆசிரியர் T.J.பத்மபுவநேந்திரன் அவர்களை பூமாலை அணிவித்து கௌரவப்படுத்தியது நெகிழ்ச்சியாகவிருந்தது.