கல்லரிச்சல் சிபான் பாலர் பாடசாலை மாணவர்களின் சர்வதேச சிறுவர் தின நிகழ்வு அண்மையில் பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது.
தாஹிர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வுக்கு பிரதம அதிதியாக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினருமான ஐ.எல்.எம்.மாஹிர் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
இதில் சிப்ஹா சமூக சேவைகள் அமைப்பின் ஸ்தாபக தலைவரும் சமூகசேவையாளருமான எஸ்.எல்.நஸார், முன்னாள் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் சுபைர், முன்பள்ளி பாலர் பாடசலையின் மாவட்ட உத்தியோகத்தர் றிஸான், ஏத்தள குளம் அதிபர், பெற்றோர்கள், ஆசிரியர்கள், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது மாணவர்களினால் கலை கலாச்சார நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நினைவுச் சின்னம் பரிசு பொதிகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.