முஹமட் ஆசிக்.
உலக சிறுவர்கள் தினத்தினை முன்னிட்டு கிழக்கு இளைஞர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் மக்கள் வங்கியின் அனுசரணையுடன் சிறுவர் தின கொண்டாட்ட நிகழ்வொன்று சம்மாந்துறை அப்துல் மஜீத் மண்டபத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்விற்கு சம்மாந்துறை வலயத்திலுள்ள பல பாடசாலைகளில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட 250 இட்கும் மேட்பட்ட மாணவர்கள் அழைக்கப்பட்டு அவர்களுக்கிடையே போட்டிகள் நடாத்தப்பட்டு பரிசில்களும் வழங்கப்பட்டது.
சம்மாந்துறை மக்கள் வங்கிக்கிளையின் முகாமையாளர் முஹம்மட் சபீக் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மக்கள் வங்கியின் அம்பாறை பிராந்திய கிளையின் முகாமையாளர் கபில திசாநாயக்க அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
மேலும் மக்கள் வங்கியின் அம்பாறை பிராந்திய கிளையின் உயர் அதிகாரிகள் பலரும், சம்மாந்துறை மக்கள் வங்கி கிளையின் உத்தயோகத்தர்களும், கிழக்கு இளைஞர்கள் அமைப்பின் உயர்பீட உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர். மேலும் இந்நிகழ்விட்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த சம்மாந்துறை சிப்கோ அமைப்பின் ஸ்தாபக தலைவரும் சமூக சேவகனுமாகிய எஸ்.எல்.ஏ. நஸார் அவர்கள் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.