எம்.எம்.ஜபீர்)
சம்மாந்துறை டலன்ட்வே கல்லூரியின் சர்வதேச ஆசிரியர் தின நிகழ்வுகள் நேற்று சிறப்பாக இடம் பெற்றது.
இந்நிகழ்வு சம்மாந்துறை பல்லின சமூக ஜக்கிய ஒன்றியத்தின் தலைவர் அல்ஹாபிழ் ஏ.ஆர்.எம்.இர்பான் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் டலன்ட்வே பணிப்பாளர் ஏ.ஆர் நஜிமுத்தீன், இலங்கை காப்புறுதி நிறுவனத்தின் முன்னால் மாவட்ட முகாமையாளர் எம்.எல்.எச்.முபாறக், சுகாதார பரிசோதகர் ஜெமீல் பொறியியலாளர் பளீல், வை.எம்.எம்.ஏ. சம்மாந்துறைக் கிளைத் தலைவர் மெளலவி எம்.எம்.எம்.யாஸீன், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.