காரைதீவு சகா.
இலங்கை புத்தாக்குனர் வரலாற்றில் முதற் தடவையாக ஏழு பதக்கங்களைப் பெற்ற சம்மாந்துறை கோரக்கர் கிராமத்தைச் சேர்ந்த யாழ்.பல்பலைக்கழக மாணவன் சோமசுந்தரம் வினோஜ் குமார் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
இதற்கு முன்னர் 2012ம் ஆண்டில் கனிந்து நாணயக்கார 5 பதக்கங்களைப் பெற்று உச்சகட்ட சாதனை படைத்திருந்தார் அவர் 2 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 5 பதக்கங்களைப் பெற்றிருந்தார்.
இச் சாதனையை முறியடித்து சோமசுந்தரம் வினோஜ்குமார் 3 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தமாக 7 பதக்கங்களையும், பரிசாக 4 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாவினையும் பெற்றுள்ளார்.
கடந்த 26ம் திகதி இலங்கை ஆய்வாளர்கள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் கொழும்பு BMICH இல் நடைபெற்ற 3வது தேசிய புத்தாக்குனர் தின விருது வழங்கும் விழாவிலேயே இப்பதக்கங்கள் வழங்கப்பட்டது.
பல்கலைக்கழக மட்டப் போட்டியில் வழங்கப்பட்ட முதல் 9 தங்கப்ப பதக்கங்களில் 3 தங்கப் பதக்கங்களுடன் 1 வெள்ளி 3 வெண்கலப் பதக்கங்களும் அடங்கும்.
இளம் விஞ்ஞானியான வினோஜ் குமார் 86 புதிய கண்டுபிடிப்புக்களைப் கண்டு பிடித்துள்ளார் இவற்றில் 38 கண்டுபிடிப்புக்கள் தேசிய மட்டத்தில் விருதுகளையும், பரிசுகளையும் பெற்றுள்ளதோடு 3 கண்டுபிடிப்புக்கள் சர்வதேச விருதுகளையும் பெற்றுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.
அண்மையில் தாருஸ் ஸபா முகநுால் தொலைக்காட்சிக்கு சம்மாந்துறையின் இளம் விஞ்ஞானி வினோஜ் குமார் அவர்கள் வழங்கி நேர்காணலை கீழே உள்ள லிங்கினை கிளிக் செய்து பார்க்கலாம்.