Ads Area

பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஜமாலியா பாடசாலை கால்வாய்கள் சுத்தம் செய்யும் பணி.

தகவல் - முஹம்மட் றிஸ்விகான்.

சம்மாந்துறை வீரமுனை வட்டாரத்தில் அமைந்துள்ள ஜமாலியா பாடசாலையின் பிரதான பாதை ஓரமாக உள்ள நீர்ப்பாசன கால்வாய் நீண்ட காலமாக துப்பரவு செய்யாமல் இருந்த படியினால் பாடசாலை மாணவர்களும் அந்த பாதையினால் பிரயாணம் செய்யும் மக்களும் மிகவும் சிரமத்தை எதிர்கொண்டனர்.

இதனை பாடசாலையின் அதிபரும் ஒரு சில பெற்றோர்களும் சம்மாந்துறை பிரதேச நீர்ப்பாசன பொறியியலாளர் திரு. முஹம்மட் நவாஸ் அவர்களின் கவணத்திற்கு கொண்டு வந்ததற்கு இணங்க இன்று அந்த நீர்ப்பாசன கால்வாய்களை சுத்தம் செய்யும் நடவடிக்கைள் ஆரம்பிக்கப்பட்டன.

அது மட்டுமல்ல பாடசாலையோடு சேர்ந்து காணபட்ட காணி ஒன்றும் சிரமதானத்திற்கு உள்வாங்கபட்டது.... இந்த சேவையினை காலம் தாழ்த்தாமல் செய்து தந்த நீர்ப்பாசன பொறியியலாளர் நவாஸ் அவர்களுக்கும் , இதில் கூடிய கவணம் செலுத்திய பாடசாலை அதிபருக்கும் மனநிறைந்த நன்றிகளை பிரதேச மக்கள் தெரிவித்துக் கொள்கின்றனர்.
















Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe