முஹமட் றிஸ்வான் (ஆசிரியர்)
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட பொதுஅறிவு வினா விடை போட்டியில் சம்மாந்துறை தேசிய பாடசாலையான சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகாவித்தியாலயம் முதலாம் இடத்தினைப் பெற்று வெற்றியீட்டியுள்ளது.
இப்போட்டிக்காக 2017 Augast மாதம் பாடசாலை மட்டத்தில் மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டனர் சம்மாந்துறை தேசிய பாடசாலை மாணவர்கள் வலயமட்டம், மாவட்ட மட்டம் ,மாகாண மட்டம் என்பவற்றில் வெற்றி பெற்று இன்று தேசிய ரீதியில் இறுதிச்சுற்றில் 1ம் இடத்தை பெற்று சாதனை படைத்து சம்மாந்துறை மண்னுக்கும், பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
இவ் வினா விடைப் போட்டியானது வசந்தம் டீ.வியில் ஒளிபரப்புச் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத் தக்கது.