எம்.சி. முபாறக் (ஆசிரியர்)
சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட மஜீட்புரம் ஒரு சிறிய கிராமமாகும் அடிப்படை வசதிகள் குறைவாகக் காணப்படும் இக்கிராமத்தில் அண்மைக் காலங்களில் மாணவர்கள் கல்வியிலே சாதனைகளைப் புரிந்து வருகின்றனர்.
அந்தவகையில் நீண்ட காலத்திற்குப் பின்னர் 2018 இம்முறை நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் கமு/சது/மஜீட்புர வித்தியாலய மாணவன் மு.ப.அ.ஸஹ்மி 167 புள்ளிகளைப் பெற்று புலமைப் பரிசிலுக்கு தகுதி பெற்று பாடசாலைக்கும்,ஊருக்கும் புகழீட்டிள்ளார்.
அதே போன்று இம்முறை அதிகமான மாணவர்கள் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
மிகவும் பின்தங்கிய மஜீட்புர கிராமதில் முன்னரை விட மாணவர்கள் கல்வியில் கரிசனை கொண்டிருப்பதனையும், கற்றல் நடவடிக்கைகளில் முன்னேற்றம் அடைந்து வருவதையும் அவதானிக்க முடிகின்றது இதில் அங்கிருக்கும் ஆசிரியர்களினதும், பெற்றோர்களினதும் பங்களிப்புக்கள் மிகவும் பாராட்டத் தக்கதாகும்.