Ads Area

தேரர்கள் மீது கண்ணீர் குண்டு மற்றும் நீர்த்தாரை தாக்குதல் நடத்தியமை கண்டிக்கத் தக்கது - ஜனாதிபதி.

தேரர்கள் மீது கண்ணீர் குண்டு மற்றும் நீர்த்தாரை தாக்குதல் மேற்கொள்ள உத்தரவிட்டவர்களுக்கு எதிராக உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். 

பொதுபல சேன அமைப்பினர் இன்று (19) மகஜர் ஒன்றை வழங்குவதற்காக ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தந்த சந்தர்ப்பத்தில் அவர்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் மேற்கொண்ட விடயம் தொடர்பில் ஜனாதிபதி தனது கவலையை வெளியிட்டுள்ளார்.

மேலும் தேரர்களின் ஆர்ப்பாட்டத்தினை கலைப்பதற்கு தன்னால் எந்த வித அறிவித்தல்களும், உத்தரவுகளும் வழங்கப்படவில்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்த ஜனாதிபதி தேரர்கள் மீது தாக்குதல் நடத்தியமை கண்டிக்கத்தக்கது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஞானசார தேரரின் நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் தேரர்களினால் வழங்கப்பட்ட மகஜரை பெற்றுக் கொண்ட ஜனாதிபதி அவ்விடயம் குறித்து தேரர்களுடன் கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe