அரசியல் காழ்ப்புணர்வுகளுக்கு அப்பால் நின்று நமது எதிர்கால சந்ததிகளுக்காக உண்மையான சமூக அக்கறையுடன் உரையாட வேண்டிய காலகட்டம் இது...!
இலங்கையின் இரண்டு பெரும் கட்சிகளும் உடைவு பட்டு அதிகாரக் கதிரைக்காக சண்டை இடும் இந்தத் தருணத்தில் சிறுபான்மை அரசியல் சக்திகள் தங்களுக்கு சாதகமான அரசியல் சமூக பொருளாதார நலன்களை முன்னிறுத்தி முடிவுகளை எடுக்க வேண்டிய ஒரு அரசியல் சந்தர்ப்பம் எனலாம்.
ரணில் விக்கிரம சிங்க ஒரு சந்தர்ப்பவாதி.
மகிந்த ராஜபக்ஷ ஒரு சர்வாதிகார இனவாதி.
இலங்கை அரசியலை உற்று நோக்கினால் இதனைப் புரிந்து கொள்ளலாம்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அரசியல் கொள்கை தாராண்மைக் கொள்கை கொண்டதாக இருக்கும் அதே வேளை அதன் வெளியுறவுக் கொள்கை மேற்கு வயப்பட்டது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அரசியல் கொள்கை கம்யூனிச அடிப்படைகள் சாயல் உள்ள போதும் அதன் வெளியுறவுக் கொள்கை மேற்கு சாரா பன்பைக் கொண்டது.
சாதக பாதகம் என்று நோக்கினால் இரண்டு பக்கமும் உண்டு. யாரை எப்போது பயன்படுத்துவது என்பதே நமது சமயோசிதம். இப்போது நாம் யாரைப் பயன்படுத்துவது...? இதற்கான விடையினை நமது அரசியல் தலைமைகள் எந்த அடிப்படையில் காணப் போகிறார்கள்...?
காப்பாற்ற வேண்டியது ஜனநாயகத்தையோ சர்வாதிகாரத்தையோ அல்ல நமது சமூகத்தை. காப்பாற்ற வேண்டியது ரணிலையோ மகிந்தவையோ அல்ல நமது சமூகத்தை. தனிநபர்கள் எமக்கு முக்கியமல்ல..ரணில் வந்தாலும் மகிந்த வந்தாலும் எங்களுக்கு ஒன்றுதான்...எங்கள் கொள்கைகளில் யார் உடன்படுகிறார்களோ அவர்களுக்கு நாம் ஆதரிப்போம் என இரா சம்பந்தன் கூறுகிறார்.
நாங்கள் என்ன நிபந்தனைகளை முன்வைக்கப் போகிறோம்....?
இது அதற்கான சந்தர்ப்பம் இல்லை என்றால் ஏன் தமிழர் விடுதலைக் கூட்டணி தங்களது நிபந்தனைகளை முன்வைத்துப் பேச்சு நடத்திக் கொண்டிருக்கிறது...?
அவர்களுக்கு முடியுமென்றால் ஏன் எங்களுக்கும் முடியாது...?
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் இன்று தீர்மானிக்கும் சக்தி பெற்றிருக்கிறார்கள்.இரண்டு தலைவர்களும் கொள்கை அளவில் உடன்பாட்டுமுள்ளார்கள்.
இதைவிடப் பொன்னான சந்தர்ப்பம் நமக்கு கிடைக்கப் போவதில்லை.
மகிந்த ராஜபக்ஷே போன்றே ஆர் பிரேமதாசாவும் ஒரு இரும்புக்கு கரம் கொண்ட ஜனாதிபதியாக இருந்தவர்.
அவரின் தயவு தேவைப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் அதை அடைந்து கொள்வதற்கான சந்தர்ப்பமாக அவருக்கெதிராகக் கொண்டுவரப்பட்ட குற்றப் பிரேரணையை துரும்பாகப் பயன்படுத்தியது.
அதன் பலாபலனை இன்று இலங்கையின் அனைத்து சிறுபான்மை சமூகங்களும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்.இவ்வாறான தீர்க்கதர்சனமிக்க முடிவுகளை எடுக்கும் சந்தர்ப்பமாக இதனைப் பயன்படுத்துங்கள்.
முஹம்மத் றனுாஸ்
சம்மாந்துறை முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்.
முஹம்மத் றனுாஸ்
சம்மாந்துறை முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்.