Ads Area

சம்மாந்துறை ஜலீல் ஜீயின் சமூக சேவைக்கு“ஸ்ரீ விபூஷண தேசகீர்த்தி ஜனாதினந்தன”விருது.

(பி.எம்.எம்.ஏ.காதர்)

சம்மாந்துறையைச் சேர்ந்த ஊடகவியலாளரும்,ஆய்வாளரும்,சமூக சேவையாளருமான ஜலீல் ஜீ (இப்றாலெவ்;வை ஜலீல்)சமூக சேவைக்காக“ஸ்ரீ விபூஷண தேசகீர்த்தி ஜனாதினந்தன” விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளார்.

புரவெசி லங்கா மன்றத்தினால் சமூக சேவையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை 2018-11-20ஆம் திகதி கொழும்பு-07, ஸ்டேன்லி வீதியில் அமைந்துள்ள கோள் மண்டல காட்சியகத்திற்கு எதிரே உள்ள பிரதேச கலைக் கூடத்தில் நடைபெறவுள்ளது இதன் போதே இவர் கௌரவிக்கப்படவுள்ளார்.

இவர் 1974-08-08ஆம் திகதி சம்மாந்துறையில் பிறந்தார்.சென்நெனல்புரம் அல்-ஹம்றா வித்தியாலயத்திலும்,உயர்கல்வியை சம்மாந்துறை முஸ்லிம் மகாவித்தியாலயத்திலும் கற்றார்.தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தில் இதழியல் டிப்ளோமா கற்கை நெறியையும் பூர்த்தி செய்துள்ளார்.

மட்டக்களப்பில் இருந்து வெளிவந்த“தினக்கதிர் ” பத்திரிகையில் நிருபராக இணைந்து அப்பத்திரிகையின் “ஊர்வலம் ” பகுதிக்கு உதவி ஆசிரியராகவும்,செயற்பட்டதுடன் உதயன்,ஈழநாதம் பத்திரிகைகளுக்கும் செய்தியாளராகவும் பணிபுரிந்துள்ளார்.

மேலும் தினகரன்,வீரகேசரி,இடி,நவமணி,சுடர் ஒளி உள்ளீட்ட பல பத்திரிகைகளுக்கும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.அத்துடன் பாவலருடன் ஓர் இரசனைச் சந்திப்பு,பட்டிப்பளை,வேப்பஞ்சொலை,கிழக்கிலங்கை இடம்பெயர் தொல்லியல் ஆய்வு,முற்றத்து முகவரிகள்,சம்மாந்துறை மண்ணின்முதல் மரியாதைக்குரியோரும்,முதன்மைகளும்,நினைவுகூர் நிகழ்வின் நினைவுச்சுடர் ஆகிய ஏழு நூல்களையும் வெளியிட்டுள்ளார்.இவர் சமூக சேவையில் ஆர்வம் கொண்டு இனநல்லுறவுக்கான பணிகளையும் செய்து  வருகின்றார்.

இவர் சென்ஜோன் அம்பியூலன்ஸ் முதலுதவிப்படைபிரிவிலும்,சாரணியப்பணியிலும் அதிக ஈடுபாடுகொண்டு பல ஜனாதிபதி விருதுகளையும்,சான்றிதழ்களையும் பெற்றுள்ளார்.மேலும் கலை இலக்கிய ஆய்வுப்பணிக்காக பணிக்கா இலங்கையிலும்,இந்தியாவிலும் பல விருதுகளையும் பாராட்டுக்களையும் பெற்றுள்ளார்.

இவர் மர்ஹ_ம் எம்.ரீ.இப்றாலெவ்வை,எம்.எஸ்.பழீலா தம்பதியின் மூத்த புதல்வராவார்.மர்ஹ_ம் பாவலர் பஸீல் காரியப்பரினால் கௌரவ நாமமாக ஜலீல் ஜீ என இலக்கிய உலகுக்கு அறிமுகம் செய்யப்பட்டார்.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe