ஏ.ஜே.எம்.ஹனீபா
நாட்டில் தற்போது தோன்றியுள்ள அரசியல் நெருக்கடியின் மத்தியில் சிறுபான்மை மக்கள் மிகவும் நிதானத்துடனும் புத்தி சாதுரியமாகவும் செயற்பட வேண்டும் என சம்மாந்துறைப் பிரதேச சபையின் தவிசாளரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவருமான ஏ.எம்.எம்.நௌசாட் தெரிவித்துள்ளார்.
சம்மாந்துறைப் பிரதேச சபை கூட்ட மண்டபத்தில் நேற்று நடைபெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சம்மாந்துறை பிரதேச மக்கள் பிரதிநிகளுக்கிடையிலான கலந்துரையாடலின் போதே சகல பிரதிநிதிகளினதும் ஏகோபித்த கருத்தாக இந்த பிரகடனத்தை வெளியிட்டார்.
இந்த நாட்டை மாறி மாறி ஆட்சி செய்து வருகின்ற அரசியல் கட்சிகள் சிறுபான்மை மக்களின் எந்தவொரு பிரச்சினையையும் முழுமையாக பொறுப்பேற்று தீர்த்து வைத்த வரலாறுகள் இல்லை அவ்வப்போது ஏற்படும் பிரச்சினைகள் தேவைகளை கருத்தில் கொண்டு சில சலுகைகளை மாத்திரம் செய்து வந்துள்ளனா;.
எனவேதான் சிறுபான்மை கட்சிப் பிரதிநிகள் தாம் நினைத்தவாறு சென்று எமது சமுகத்தின் இருப்பை கொச்சைப்படுத்தி காட்டிக் கொடுக்கின்ற வேலைகளில் ஈடுபடாமல் தங்களை நம்பி இந்த சமூகம் உங்கள் மீது ஒப்படைத்த அமானிதத்தை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் இந்த முயற்சிகளுக்காக தாம் சார்ந்த கட்சிகளின் தலைமைகள் எடுக்கின்ற கூட்டான சரியான முடிவுகளின் பிரகாரம் செயற்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
நாட்டிலே முஸ்லீம் மக்களுடைய நிறைய பிரசிசினைகள் இன்னும் தீர்க்கப்படாமல் இரு அரசாங்கமும் இழுத்தடிப்புக்களை செய்து வருகின்றனா; பொதுவாக அண்மைக்காலமாக எமது மாவட்டத்தில் பேசு பொருளாக மாறியுள்ள கரங்கா வட்டை காணிப்பிரச்சினையினை தீர்த்து வைக்க முடியாத அரசியல் கலாசார பின்னணியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
இந்த விடயங்களை இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தமக்கு சாதகமாக்கிக் கொள்ள எமது தலைமைகள் மேற்கொண்டு வருகின்ற முயற்சிகளை முறியடித்துக் கொண்டு சுய இலாபத்துக்காகவும் பணமுடிச்சுக்களுக்கும் அமைச்சுப் பதவிகளுக்காகவும் காட்டிக் கொடுப்புக்களை செய்து விடாமல் எமது சமூகத்துக்கு சாதகமான செயற்பாடுகளில் கைகோர்த்து செயற்படுமாறு வாக்களித்த மக்கள் சார்பாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் இதனை தெழிவு படுத்துகின்றோம்ம் எனவும் தவிசாளார் நௌசாத் தெரிவித்துள்ளார்.