சம்மாந்துறையின் கலை இலக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல், நுால் ஆய்வுகளில் ஈடுபடுதல், எழுத்தாளர்களுக்கு களம் அமைத்துக் கொடுத்தல், சம்மாந்துறையின் வரலாறோடு தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளல் போன்றவற்றினை நோக்காக கொண்டு சம்மாந்துறையில் உள்ள இலக்கியவாதிகளின் பதினோராவது “குயிலோசை இலக்கிய ஒன்றுகூடல்” ஒன்று இன்று (2018-03-04) சம்மாந்துறை அல்-அமீர் வித்தியாலய திறந்த வெளியில் காலை 9.00 மணியளவில் இடம் பெற்றது.
இன்றைய சந்திப்பில் “நவீன மனிதன் என்ற நான்” எனும் தலைப்பில் இடம்பெற்ற கவிரங்க நிகழ்வில் கவிஞர்களான; வைத்தியர் காலித், இஸ்மா பரீட், சுக்கூர் முஸ்தபா, சுலைமா இப்றாஹிம், அலியார் டீ.ஓ, கலைமணி ஏ.சி. இஸ்மாலெப்பை, அஸ்லம் வஹாப், வைத்தியர் நியாஸ் அஹமட், இப்றாலெவ்வை உடையார், நுஹா, மஸூரா சுஹுறுதீன் மற்றும் அஸாருதீன் ஆகியோரால் கவிதைகள் வாசிக்கப்பட்டது.
மேலும் கவிதை, சிறுகதை, வரலாறு, புதிய இலக்கியப் போக்குக்கள், சஞ்சிகை போன்றன தொடர்பாக வருகை தந்த இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், வரலாற்று ஆசிரியர்கள், கவிஞர்கள் போன்றோரால் கருத்துக்கள் பரிமாறப்பட்டது.
மேலும் கவிதை, சிறுகதை, வரலாறு, புதிய இலக்கியப் போக்குக்கள், சஞ்சிகை போன்றன தொடர்பாக வருகை தந்த இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், வரலாற்று ஆசிரியர்கள், கவிஞர்கள் போன்றோரால் கருத்துக்கள் பரிமாறப்பட்டது.