கல்விக்கு வித்திட வேண்டிய காரியதரிசிகள் கல்வியைக் கூறு போட முனைவதாக புதுப் படமெடுக்க எத்தணிக்கின்றது இன்றைய நிலை. அது எவ்வாறென்றால் ‘கணக்கன் கணக்கறிவான் தன் கணக்கைத் தான் அறியான்’ என்கின்ற நிலைப்பாட்டிலியே அமைகின்றது.
இது என்னவென்று பலருக்கும் புரியாத புதிராக உள்ள நிலையில் விரிவாக கூறலாம் என முனைகின்றேன். அதாவது சம்மாந்துறையில் அமையப் பெற்றுள்ள உயர் தொழில் நுட்ப நிறுவனமானது (SLIATE) பல நீண்ட வரலாற்றைக் கொண்டதாகும்.
ஆரம்ப காலத்தில் பூமரத்து சந்தி தொட்டு பல இடங்களிலும் தொக்கு நின்று அல்லல்களையும் அலைச்சல்களையும் சுமந்த இந் நிறுவனம் அண்மைய சில வருடங்களாக வங்களாவடியில் ஒரு அமைவிடத்தையும், அதற்கான தனித்துவ பாணியையும் கொண்டமைந்திருக்கின்றது.
இருந்த போதிலும் உயர் தொழில் நுட்ப நிறுவனத்திற்கென தனியான கட்டிடமொன்றை பெற்று அந்த கட்டிடத்திற்கான கட்டுமாணப் பணிகளும் தற்போது இடம்பெற்று வருகின்ற நிலையில் அங்குள்ள பல நூறு மாணவர்களும் எதிர்கொள்கின்ற சிரமங்கள் நாம் அறியாத அல்லல்கள்.
இப்படியொரு நிலைமையில் தான் சுமார் ஒரு வருடங்களுக்கு கூடிய காலங்களாக SLIATE மாணவர்களுக்கான (முழு நேர, பகுதி நேர) வகுப்புக்கள் நடாத்துவதற்கு போதிய கட்டிடம் இல்லாமையின் காரணமாக சம்மாந்துறை ஜனாதிபதி விளையாட்டுத் தொகுதியில் அமைந்துள்ள கட்டிடமொன்றில் குறித்த வகுப்பு இடம்பெற்று வருகின்றது. இவ் விடயம் பலராலும் அறிந்தும், அறியப்படாலும் இருக்கக்கூடும்.
இங்கு இடம்பெற்று வருகின்ற வகுப்புகளுக்காக மாதாந்தம் வாடகை செலுத்தப்படுவதாகவும் அறியமுடிந்துள்ளது. இக் கட்டிடமானது சம்மாந்துறை பிரதேச சபைக்கு சொந்தம் என்பதனால் உயர் தொழில்நுட்ப நிறுவனத்தினால் பிரதேச சபைக்கு குறிப்பிட்ட பெறுமதி வாய்ந்த தொகை வாடகை செலுத்த வேண்டும் என்ற ஒப்பந்த அடிப்படையில் அவை வழங்கப்பட்டுமுள்ளது.
இதன் தொடரிலேதான் கடந்த 2014.ஏப்ரல்.24 ஆம் திகதி தொடக்கம் சம்மாந்துறை ஜனாதிபதி விளையாட்டுத் தொகுதியில் அமைந்துள்ள கட்டிடமொன்றில் SLIATE மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.
ஏதோ ஒரு வகையில் கல்வித் தாகம் தனிக்கும் வகையில் மாணவர்களுக்கு இவ்வாறானதொரு பொக்கிஷம் குறித்த அமைவிடத்தில் கிடைத்ததையிட்டு மாணவர்களும், கல்லூரி நிர்வாகமும் மன நிறைவு பெற்றது.
காலம் கடக்கின்றது. நாட்கள் நகர்கின்றது. மாணவர்களின் வரவுகள் பெருக பெருக கல்வியின் வளர்ச்சியும் அதிகரித்து கல்வி மீதான தாகமும் மாணவர்களுக்கு அதிகரிக்கின்றது. இப்படியொரு சுமூகமான பயணத்தில், நடு ஆற்றில் வாய் விரித்த முதலை போல் SLIATE நிறுவனத்தின் பொறுப்பாளர் மேசையில் விழுந்தது, STR/PS/SE/Sports.Comp/10 இலக்கமிடப்பட்ட பிரதேச சபையின் கடிதம்.
திறந்து பார்த்தால், கேடு வரும் பின்னே, மதி கெட்டுவரும் முன்னே என்பது போல விழுந்தது பேரிடி அது என்ன வென்றால், குறித்த கட்டிடத்தில் இடம்பெறும் இந் நிறுவனத்தின் கல்வி நடவடிக்கைகளை உடன் நிறுத்தி விட்டு வெளியேறுமாறு குறிப்பிடப்பட்டிருந்தது.
உடனடி அமுலுக்கு வரும் வகையில் குறித்த தீர்மாணம் சபையில் நிறைவேற்றிய கையோடே பிரதேச சபை அறிவித்தலை வழங்கியிருந்தது. பின்னர் மாணவர்களுக்கு கல்வி நடவடிக்கைகளை தொடர முடியாத அளவு திண்டாட்டம்.
இப்படி சம்பவத்தினை பார்க்கும் போது மிகவும் பரிதாபமான முறையில் சிந்திக்க வைக்கின்றது. எமது சமூகத்தின் மனப்பாங்கு இது தானா? எம் சமூகத்தவரின் சிந்தனை வெளிப்பாடு இவ்வளவுதானா? என்றெல்லாம் பல கேள்விகள் எழுந்தவண்ணம் உள்ளன.
உண்மையில், சாதாரண நிலைமையில் நோக்குவோமானால் இது பிரதேச சபையினரின் மனிதாபிமானமற்ற செயலென்றுதான் கூற வேண்டும். என்னதான்; சட்டங்களும், திட்டங்களும் வகுத்தாலும் கல்விக்காக இளகிய மனங்கொண்டு அனுசரித்து செல்வதே சிறந்த பண்பாகும்.
சரி, இது ஒருவிதத்தில் பிரதேச சபை பாரபட்சமின்றி மாணவர்கள் மேல் தாக்கிய கல்விக் காயம் என்று எடுத்துக் கொண்டாலும், இன்னொரு பக்கம் குறித்த நிறுவனத்தாருக்கு கட்டிதத்தை கொடுத்ததில் சபை எதிர்நோக்கும் பிரச்சினைகளும் சொல்லி உணர வைக்க முடியாதனவாக உள்ளது.
இவ் விடயம் குறித்து பிரதேச சபையின் அதி முக்கியம் வாய்ந்த அதிகாரிகளுடன் தொடர்பினை ஏற்படுத்தி குறித்த விடயம் சம்பந்தமாக அலசியபோது, அவர்கள் சில நியாயமான கருத்துக்களை இவ்வாறு தெரிவித்தனர்.
"2017 ஏப்ரல் முதல் 2018 ஏப்ரல் வரை ஒரு வருட காலத்திற்கு வாடகை அடிப்படையில் வழங்கப்பட்ட குறித்த கட்டடத்தில், தற்போது வரை சுமார் 6 மாதங்களுக்காக மேலாக எவ்வித அலுவலகம் சார் கடித நிபந்தனைகளுமின்றியும் கொடுப்பணவுகள் இன்றியும் இடம்பெற்று வருகின்ற பாட நெறியானது பிரதேச சபையின் உச்ச வரம்பை மீறிய நிலையில் வழங்கப்பட்ட சலுகையாகும்.
அதே நேரம், குறித்த நிறுவனத்தின் நிர்வாகத்தினர் இது குறித்து சபையின் உயர்மட்டங்களிடம் எவ்வித பேச்சுவார்த்தைகளையும் மேற்கொள்ளாத நிலையிலேயே வகுப்புக்களை நடாத்தி வருகின்றனர்.
இப்படியான இக்கட்டான நிலைமையில் எமது சபையினால் மாதாந்த வாடகைத் தொகையை ரூ. 60000 ஆக அதிகரித்தும் கேட்டிருந்தோம். ஆனால், அதற்குண்டான சிறந்த பதில் எமக்கு கிடைக்கவில்லை.
இதே நேரம் குறித்த கட்டிடம், விளையாட்டுத் தொகுதி அமையப்பெற்ற வளாகம் என்பதனால் அங்கு இவ்வாறான கல்வி நடவடிக்கை இடம்பெறுவதால் பல்வேறு விதமான வருமானங்கள் மற்றும் விளையாட்டு விவகாரங்கள் தடைப்பட்டிருந்தது.
அது மாத்திரமல்லாது அக் கட்டிடத் தொகுதியை வைபவங்களுக்கு வாடகைக்கு விடும் வழக்கத்தினை மக்கள் பழக்கத்திற்கு கொண்டு வந்த சம்மாந்துறை பிரதேச சபை வருமானத்தில் குறைவு ஏற்பட்டாலும் பராவாயில்லை கல்வி நடவடிக்கைக்கு முன்னுரிமை வழங்குவோம் என்ற நிலையில் கட்டிடத்தை வழங்கியிருந்தது.
இப்படி கொடுத்த பல சலுகைகளையும் கருத்தில் கொள்ளாது உயர் தொழில்நுட்ப நிறுவன நிர்வாகம் கடந்த ஆறு மாதங்களாக எவ்வித மதிப்புக்களையும் வழங்காது பொடுபோக்காக செயற்பட்டமையின் வினை இப்போதல்ல பிற்காலத்தில் கணக்கு பரிசோதனை இடம்பெறும் (‘ஒடிட்’) போது என்ன பதிலை சபை கூறுவது என்ற நிலை.
இப்படி கொடுத்த பல சலுகைகளையும் கருத்தில் கொள்ளாது உயர் தொழில்நுட்ப நிறுவன நிர்வாகம் கடந்த ஆறு மாதங்களாக எவ்வித மதிப்புக்களையும் வழங்காது பொடுபோக்காக செயற்பட்டமையின் வினை இப்போதல்ல பிற்காலத்தில் கணக்கு பரிசோதனை இடம்பெறும் (‘ஒடிட்’) போது என்ன பதிலை சபை கூறுவது என்ற நிலை.
இப்படி பல்வேறு பிரச்சினைகள் நிர்வாக ரீதியாக இருக்கும் போது, இன்னும் இன்னும் நிர்க்கதிக்குள்ளாகி பின்னர் பிரதேச சபை தங்களின் உயர் ஆணையகத்தின் முன் கைகட்டி நிற்பதே விதியாகிவிடும்." - என இன்னும் பல விதமான காரணங்களை முன்வைத்தனர்.
உணமையிலேயே இங்கு இடம்பெற்ற நிர்க்கதியான நிலைமையை நோக்கும் போது “திண்ணவும் முடியா! விழுங்கவும் முடியா!” எனும் திண்டாட்டம்தான்.
இது விடயத்தில் வெறுமெனே பிரதேச சபை தடுத்துவிட்டது என்ற குற்றச் சாட்டில் இதை அரசியலாக்கவும் சிலர் எத்தணிக்க முனையாலாம். ஆனால், யாதார்த்தபூர்வமாக சிந்திப்போமேயானால், வெளியகப் பார்வை பிரதேச சபையில் மக்கள் பிரதிநிதிகள் இருந்தாலும் கூட அந் நிறுவனம் மாகாண சபையின் ஒரு ஆணையாகத்தின் கீழ் இயங்குகின்ற நிறுவனம். அந் நிறுவனத்திற்கும் சில சட்ட ஏற்பாடுகள், பொறுப்புக் கூறும் கடப்பாடுகள் உண்டு.
அதே வேளை குறித்த சபை வருமானம் ஈட்டி ஊரின் அபிவிருத்திற்கு உந்துகோலாகவும், ஊரின் பராமரிப்பில் செழிப்பாகவும் இயங்க வேண்டிய அவசியம் உள்ளது. அதற்காக ஒரு அரச நிறுவனத்தின் நிதி இன்னொரு அரச நிறுவனத்திற்கு மாற்றம் செய்யப்படுவதில் எமக்கு எவ்வித குறையும் ஏற்படப்போவதில்லை.
மாறாக இதை தடுத்த விடயம் அரசாங்கத்திற்கு ளுடுஐயுவுநு இனால் கொடுக்கப்படக்கூடிய அமுக்கத்திற்கு ஒரு உத்தியாகவும் அமையலாம். இதன் பின்னர் மாணவர்கள் அலைச்சல்கள்களை கருத்திற்கொண்டு கட்டப்பட்ட கட்டிடம் முடிவதற்கு இன்னும் பல நாட்கள் உள்ளன. ஆகவே, உடனடியாக பிரதேச சபைக்குரிய பணத்தை ஒதுக்கீடு செய்வோம் என்ற முடிவுக்கும் நிரவாகம் வரக்கூடும்.
இதே நேரம், “கை வைத்திருப்பது கல்வியின் பொறி, காலம் சென்றால் பெறுவது கடினம், கல்விக்கு உரமூட்டுவது நம் அனைவரினதும் கடமை உனும் தொனிப்பொருளில், சம்மாந்துறை பிரதேச சபை மாணவர்களின் நலன் கருதி இன்னும் சில காலம் கொடுத்து உதவுவது சாலச்சிறந்ததாகும்.’’ ஆனால், இக் கூற்று பிரதேச சபை இப்படி செய்யத்தான் வேண்டும் என்ற நியதியல்ல.
எனவே, மாணவர்கள் உணரவேண்டிய சில விடயங்கள் இது!...
“கறி புளிச்சிட்டாம் என்று, கோகியை குறை சொல்லி வேலை இல்லை. ஆக்கின சட்டியிலிருந்து மூட்டின நெருப்பு வரை சுத்தமாக இருந்திச்சா என்று பார்க்கனும்” இது நமது ஊர், நமது மாணவர்கள், நமது ஊரின் வளம் பாதுகாப்பதும், பறித்தெடுப்பதும் நமது கடமை. “மாறாக அரசனும் இல்லா…….” நிலைக்கு கொண்டு செல்லாதீர்கள்!
“கல்விக்குள் அரசியல் வரலாம், ஆனால் அரசியலில் கல்வி நுழையவே கூடாது!”
✍️ கியாஸ் ஏ. புஹாரி