பல காலங்களாகவே நிதியுதவி தேடுவதே தொழில்முனைவோருக்கு பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. இந்தக் கடினமான போராட்டத்தை எதிர்கொண்டு தங்களது திட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி புதுமை படைக்கும் கனவை பலர் கைவிடுகின்றனர். சிறப்பான வணிக திட்டமானது சந்தையில் தனக்கென தனி இடத்தை பிடித்துவிட்டால் செழிக்கத் துவங்கிவிடும் என்பதை இவர்கள் உணர்வதில்லை.
உங்களது திட்டம் வாயிலாக நிறுவனமும் அதன் மூலம் மக்களும் வந்தடைவார்கள். அந்த மக்கள் உங்களுக்கான சந்தையைக் கொண்டு சேர்ப்பார்கள். ஒரு நல்ல திட்டம் சிறப்பான வணிகத்திற்கான வழிவகுக்குமே தவிர அதுவே வருவாய் ஆகாது என்பது நம் அனைவரும் அறிந்ததே. இன்று பில் கேட்ஸ், மார்க் ஸக்கர்பெர்க், எலன் மஸ்க் போன்ற உலகின் வெற்றிகரமான தொழில்முனைவோர் எவருமே சிறியளவில் செயல்படத் துவங்கி படிப்படியாகவே முன்னேறினர்.
ஃபேஸ்புக் ஹார்வர்ட் பலகலைக்கழகத்தின் தங்குமறையிலிருந்து மிகக்குறைந்த செலவிலேயே துவங்கப்பட்டது. பில் கேட்ஸ் கல்லூரிப் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு இரண்டாண்டுகளுக்கு பிறகு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை உருவாக்கினார்.
“நீங்கள் கனவு கண்டால் நிச்சயம் உங்களால் சாதிக்க முடியும்.” சரி இதோ குறைந்த முதலீட்டில் அதிக லாபம் ஈட்டக்கூடிய 35 வகையான சுயதொழில்கள்.
01. பயண நிறுவனம் :
இன்று மக்கள் அதிகம் பயணிக்கின்றனர். இதனால் ஊக்கமுள்ள தொழில்முனைவோர் இந்தப் பகுதியில் செயல்படத் துவங்கினால் சிறப்புறமுடியும்.
02. மொபைல் ரீசார்ஜ் கடை :
பலர் ஆன்லைனில் ரீசார்ஜ் செய்து வந்தாலும் இன்று பலர் கடைகளையே நாடுகின்றனர். ஒரு சிறிய இடத்தை வாடகைக்கு எடுத்து அந்தப் பகுதியில் நெட்வொர்க் வழங்குவோருடன் இணைந்து கமிஷன் அடிப்படையில் செயல்படலாம்.
03. சிற்றுண்டியகம் :
உணவு பிரிவிற்கான சந்தை எப்போதும் சிறப்பாகவே இருக்கும். சிறிய அறையை வாடகைக்கு எடுத்து தகுந்த அனுமதி பெற்று துவங்கிவிடலாம். வாடகைக்கும் மூலப்பொருட்களுக்கும் செலவிட்டால் போதும்.
04. டியூஷன் மையம் :
வீட்டிலிருந்தே செயல்படலாம் என்பதால் எந்தவித செலவும் இல்லை. சமூக ஊடகங்கள் வாயிலாகவோ, துண்டு பிரசுரங்கள் வழங்கியோ, பரிந்துரைகள் மூலமாகவோ உங்கள் முயற்சி மக்களை சென்றடைய முயற்சியெடுக்க வேண்டும்.
05. பழச்சாறு கடை :
தக்க அனுமதி பெற்றுவிட்டால் ஒரு கடையை வாடகைக்கு எடுத்து துவங்கிவிடலாம். மூலப்பொருட்கள், ஜூஸ் போடுவதற்கான இயந்திரம், உதவியாளர் நியமித்தால் அவருக்கான சம்பளம் ஆகியவையே இந்த வணிகத்திற்கான செலவாகும்.
06. தையல் பணி :
மக்கள் தாங்களாகவே ஆடைகளை வடிவமைக்கத் துவங்கியுள்ளதால் டெய்லர்களுக்கான தேவை பல இடங்களில் அதிகரித்துள்ளது. அறை வாடகை, தையல் இயந்திரம், மின்சாரம் போன்றவை இந்த வணிகத்திற்கான செலவுகளாகும்.
07. நிகழ்ச்சி அமைப்பாளர்கள் :
நிகழ்ச்சிகளுக்கான இடம், ஸ்பான்சர்கள், நிகழ்ச்சிகளை திட்டமிடுதல் போன்ற ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். ஆனலைன் மார்கெட்டிங் உத்திகளை பயன்படுத்தி ப்ராண்ட் இமேஜ் உருவாக்கவேண்டும்.
08. திருமண ஏற்பாட்டாளர்கள் :
இந்த வணிகத்தில் ஈடுபட விரிவான வண்ணமயமான வலைதளத்தை உருவாக்கி வாடிக்கையாளர்களை ஆன்லைன் வாயிலாக அணுகலாம்.
09. போட்டோகிராஃபி :
ஏற்கெனவே உங்கள் வசம் தொழில்முறை கேமரா இருக்குமானால் தனிப்பட்ட விதத்தில் ப்ராஜெக்டுகளை ஏற்றுக்கொள்ளலாம். நேரத்தை மட்டும் செலவிட்டால் போதும்.
10. விளம்பரங்களை உருவாக்கும் பணி :
பல கார்ப்பரேட் நிறுவனங்கள் விளம்பரம் சார்ந்த பணியை வெளியிலிருந்து பெறுவதால் இதற்கான ஆலோசகரின் தேவை காணப்படுகிறது. உங்களது சேவைகளை விளக்கக்கூடிய வலைதளத்தை உருவாக்கி வணிக வாய்ப்புகளைப் பெறலாம்.
11. தேநீர்கடை :
உற்பத்தியாளர்களிடமிருந்து மூலப்பொருளை கொள்முதல் செய்து தேநீர் விற்பனை செய்யலாம். கடைக்கான பெஞ்ச் மற்றும் டேபிளை வாங்க செலவிட்டால் போதுமானது.
12. ஃபேஷன் டிசைனிங் :
பழைய புடவைகளை புத்தம்புதிதாக தனித்துவமாக மாற்றும் பணியில் ஈடுபட்டு பலர் சிறப்பித்துள்ளனர். இவ்வாறு வடிவமைப்பிற்கான பொருட்கள் வாங்குவதற்கும் பணியிடத்திற்கும் தேவையான முதலீடு செய்யவேண்டும்.
13.கிராஃபிக் டிசைனிங் :
இதற்கான பிரத்யேக வசதிகள் உங்களிடம் இருக்குமானால் உங்களது ப்ராஜெக்ட் குறித்து மக்களிடையே விளம்பரப்படுத்தினால் இந்தச் சேவைக்கான தேவையிருப்போர் உங்களை அணுகுவார்கள்.
14. உணவு டெலிவரி :
இன்று பலர் வீட்டு உணவையே விரும்புகிறார்கள் என்றாலும் அதற்கான நேரம் செலவிட இயலாமல் பலர் சிரமப்படுகின்றனர். அன்றாடம் வீட்டில் சமைக்கும் உணவின் அளவை சற்று கூடுதலாக செய்வதன் மூலம் இந்த வணிகத்தில் ஈடுபடலாம்.
15.யூட்யூப் சானல் :
படைப்பாற்றல் திறன் கொண்டவர்களுக்கு யூட்யூப் வாயிலாக வீடியோக்களை பதிவிடலாம்.
ஒவ்வொரு வணிக வாய்ப்பிலும் அதற்கே உரிய ஆபத்துகளும் தடைகளும் உள்ளது. எனினும் வெற்றியடைவதற்கான சாத்தியக்கூறுகளும் அடங்கியுள்ளது. இறுதியாக உங்களுக்கு ஊக்கமளிக்கும் ஹென்ரி ஃபோர்ட் வரிகள்:
“அனைத்தும் உங்களுக்கு எதிராக இருக்கும்போது ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளவேண்டும். விமானம் காற்றுக்கு எதிராக செயல்படுமே தவிர காற்றுடன் அல்ல.”
Thanks for pic - Anuska Wijesinha