Ads Area

நவம்பர் 19 இன்று உலக கழிப்பறை தினமாகும் ; இதெற்கெல்லாம் ஒரு தினமா என கேட்போர் வாசிக்கவும்.

உலகத்தில் இதெற்கெல்லாம் தினம் வைப்பார்களா? என்ற கேள்வி உங்களுக்கு எழுந்தால் தயவு செய்து இதனை படியுங்கள்.

உலக அளவில் ஒரு நாளைக்கு போதிய கழிப்பிட வசதி இல்லாமல் நோய்வாய்ப்பட்டு 1000 குழந்தைகள் இறந்து போகின்றன. உலக அளவில் ஆறில் ஒரு பெண் குழந்தை பள்ளிகளில் கழிப்பிட வசதி இல்லாததால் படிப்பை தொடர முடியாமல் படிப்பை நிறுத்திவிடுகிறது. 1 பில்லியன் மக்கள் இன்றளவும் திறந்தவெளியை தான் கழிப்பறையாக பயன்படுத்துகிறார்கள். இந்த சூழல் ஏன் என்று பார்த்தால் போதிய சுற்றுச்சூழல் வசதியை அந்த நாட்டு அரசுகள் ஏற்படுத்தி தராததும், கழிப்பறை பற்றியும், அதனால் ஏற்படும் நோய்கள் பற்றியும் போதிய

இந்தியாவில் 818 மில்லியன் மக்கள் திறந்த வெளியைதான் கழிப்பறையாக பயன்படுத்துகிறார்கள். இந்தியாவில் பெரும்பாலான பெண் குழந்தைகள் படிப்பை நிறுத்த போதிய கழிப்பறை வசதி இல்லாத பள்ளிகளே காரணமாகின்றன. தமிழ் நாட்டில் மட்டும் 1500 க்கும் மேற்பட்ட பள்ளிகள் கழிப்பறை இன்றி இயங்கி வருகின்றன. .

இப்படி இந்த கழிப்பறை பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் கடந்த 2001ம் ஆண்டு நவ.19ம் தேதி உருவாக்கப்பட்டதுதான் உலக டாய்லெட் கழகம் என்ற அமைப்பு. இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்ட நவ.19ம் தேதியே அனைத்து நாடுகளிலும் உலக கழிப்பறை தினமாக கடைபிடிக்கப்படுகிறது. சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த தினத்தின் நோக்கம். ஆனா ஆம்பளைங்க தினத்தில் இத்தினத்தை கொண்டாட ஏற்பாடு செய்ததில் ஐ. நா.வில் இருந்த இரண்டு பெண்கள் என்பது எக்ஸ்ட்ரா தகவல்,

@rj_rofina @MasalaFM
#MasalaFM #Aanthai
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe