“எங்கள் மானம் காத்த விலை போகாத தங்க மகன் மன்சூரே”
இவ்வாறான வாசகங்கள் அடங்கிய பதாகைகள் சம்மாந்துறையில் நேற்று காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
நாட்டில் நிலவும் இஸ்தீரமற்ற அரசியலை சாட்டாக வைத்து பெருந் தொகையான பணத்திற்கும் பதவிக்கும் மகிந்த-மைத்திரி தரப்புக்கு சோரம் போன, போக எத்தனித்த சில அரசியல்வாதிகளுக்கு மத்தியில் தனது தலைமைக்கு கட்டுப்பட்டு மக்கள் தனக்கு அளித்த அமானித வாக்குகளை மதித்து சம்மாந்துறைக்கு நற்பெயரை ஏற்படுத்தியமைக்காகவே பாராளுமன்ற உறுப்பினரை கௌரவப்படுத்தி பதாகைகள் வைத்து மக்கள் அன்பை வெளிப்படுத்தியுள்ளனர்.