Ads Area

6 ஆண்டுகளாக தந்தையை இழந்த பெண்களுக்கு இலவசமாக திருமணம் செய்து வைக்கும் தொழிலதிபர்.

குஜராத்தை சேர்ந்த தொழிலதிபர், கடந்த ஆறு ஆண்டுகளாக தந்தை இழந்த பெண்களுக்கு இலவசமாக திருமணம் செய்து வைத்து வருகிறார். நேற்று சூரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட திருமண நிகழ்ச்சியில், குஜராத் தொழிலதிபர் மகேஷ் சவானி, தந்தை இழந்த 261 பெண்களுக்கு திருமணம் நடத்தி வைத்தார்.

இதில் இஸ்லாமிய, கிறிஸ்துவ பெண்கள் என அனைத்து மதத்தவருக்கும் அவரவர் முறைப்படி திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு தங்க நகைகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் சீதனமாக வழங்கப்பட்டன.  இதுவரை, ஆயிரத்து 300 க்கும் மேற்பட்ட பெண்களுக்கு அவர் திருமணம் நடத்தி வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe