புத்தளம் அனுராதபுர வீதியின் சிரம்பயடி பகுதியில் இன்று (24-12-2018) பஸ் வண்டி மோதி குட்டி யானை ஒன்று பலியாகியுள்ளது.
மன்னார் கொழும்பு சேவையில் ஈடுபடும் தனியார் சொகுசு பஸ் வண்டியே இவ்விபத்துக்கு முகம்கொடுத்துள்ளது. பஸ் வண்டியில் பயணித்த எவருக்கும் சேதமில்லை எனினும் மேற்படி குட்டி யானை சம்பவ இடத்திலேயே இறந்தது.
அதிகரித்த வேகமே விபத்துக்கு காரணமென தெரிவிக்கப்படுகின்ற நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பஸ்லில் பயணம் செய்தவர்கள் காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Thanks - Puttalam online