ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் முதலாவது பேராளர் மாநாடு, நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணிக்கு காத்தான்குடி பீச்வே ஹோட்டலில் இடம்பெற்றது.
ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் தலைமையில் நடைபெற்ற இந்தப் பேராளர் மாநாட்டில், மூத்த அரசியல்வாதியும் கூட்டமைப்பின் செயலாளர் நாயகமுமான எம்.ரி. ஹசனலி மற்றும் பிரதித் தலைவர் நஸார் ஹாஜியார், சிரேஸ்ட பிரதித் தலைவர் மிப்லார் மௌலவி உட்பட உயர்பீட உறுப்பினர்கள், நாட்டின் பல பாகங்களிலும் இருந்து வந்த பேராளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் தவிசாளராக பசீர் சேகுதாவூத்தும், செயலாளர் நாயகமாக எம்.ரி.ஹசன் அலியும் மீண்டும் தெரிவு செய்யப்பட்டனர்.
சாய்ந்தமருதைச் சேர்ந்த முன்னாள் பிரதியமைச்சர் எஸ்.நிஜாமுதீன் பிரதித் தலைவர்களில் ஒருவராகவும் அறிவிக்கப்பட்டார். அத்தோடு அட்டாளைச்சேனையைச் சேர்ந்த பஜ்றுதீன் உதவிப் பொருளாளராகவும் அறிவிக்கப்பட்டார். தேசிய அமைப்பாளராக அக்கரைப்பற்றைச் சேர்ந்த இர்பான் மொஹிதீன் தெரிவு செய்யப்பட்டார்.
.