ஏ.ஜே.எம்.ஹனீபா.
சமுர்த்தி சிப்தொற புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு மற்றும் சமுர்த்தி அபிவிருத்ததி உத்தியோகத்தகள் கௌரவிப்பு நிகழ்வுகள் இன்று (2018.12.04) சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் சிரேஷ்ட தலைமைப்பீட சமுர்த்தி முகாமையாளர் ARM.சாலிஹ் அவர்களின் நெறிப்படுத்தலில் பிரதேச செயலாளர் IM.றிகாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதீதியாக அம்பாரை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் SM.சப்றாஸ் கலந்து சிறப்பித்தார்.மேலும் இந்த நிகழ்வில் சமுர்த்தி முகாமையாளர்கள்,சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் தலைவர்கள்,மாணவ மாணவிகள் ,பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.