ஈழம் ரஞ்சன்.
இன்று "சர்வதேச மனித உரிமை தினத்தை" முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டடோரின் உறவுகளால் முல்லைத்தீவில் தமக்கான நீதி வேண்டி அடையாள ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது ஆர்ப்பாட்டத்தினைத் தொடர்ந்து தமக்கு நீதி வேண்டுமென ஐ.நாவக்கான மனு ஒன்றும் கையனிக்கப்பட்டது.
அரசாங்கத்திடம் எத்தனையோ எமது பிரச்சணைகளை கூறியுள்ளோம் இதுவரைக்கும் எதுவித தீர்வும் தரவில்லை. இனிமேல் சர்வதேசந்தான் எமக்கான தீர்வு தரவேண்டும் என வடக்கு-கிழக்கு மாவட்டங்களின் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தலைவி திருமதி யோகராசா கலாரஞ்சினி அவர்கள் தெரிவித்துள்ளார்.
அம்பாறை மட்டக்களப்பு திருகோணமலை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தாம் தொடர்ந்து தமது உறவுகளுக்காக நடத்தி வரும் கவணயீர்ப்ப போராட்டங்களிற்கான தீர்வினை சர்வதேசம் சற்றும் தாமதியாது தரவேண்டும் எனக்கோரி அம்பாறை திருக்கோவில் பகுதியிலும் அடையாள ஆர்ப்பாட்டம் செய்தனர்.