ஊருக்கும், பேருக்கும், பெருமைக்கும் கோடி ரூபாய்களை செலவு செய்து திருமணம் செய்பவர்களுக்கு மத்தியில் மிகவும் முன்மாதிரியாக, அனைவரும் பாராட்டத்தக்க வகையில் திருமணம் செய்திருக்கின்றார்கள் ஒரு சிங்கள தம்பதியினர்.
பிரதீப் என்ற இளைஞரும் அவரது மனைவியும் இணைந்து வறுமையில் பாதிக்கப்பட்ட குடும்பம் ஒன்றிற்கு வீடு ஒன்றை நிர்மாணித்து கொடுத்துள்ளனர்.
குறித்த தம்பதிகள் இருவரும் திருமண பந்தத்தில் இணைந்த போது அவர்களது திருமணத்தை மிகவும் எளிமையாக செய்துள்ளனர் திருமணத்திற்கு வந்தவர்கள் இந்த தம்பதியினர் கஞ்சத்தனமிக்கவர்கள் என விமர்சனம் செய்யும் அளவுக்கு மிகவும் எளிமையாக தங்களது திருமணத்தை நடாத்தி அதன் மூலம் மீதப்படுத்திய பணத்தைக் கொண்டு வீடு இன்றி தவித்து வந்த ஒரு ஏழைக் குடும்பத்துக்கு வீடு ஒன்றைக் கட்டிக் கொடுத்துள்ளனர்.
தாங்கள் திருமணத்தில் சேமித்த பணத்தில் ஒரு குடும்பம் வசிக்கக் கூடிய அளவில் கட்டிக் கொடுக்கப்பட்ட அந்த வீட்டினை அண்மையில் அந்த தம்பதிகள் உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.
இவர்களது இந்த முன்மாதிரியான திருமணத்தினையும் மனிதாபிமானமிக்க செயற்பாட்டையும் பலரையும் பாராட்டி வருகின்றனர்.