ஏ.ஜே.எம்.னீபா
தேசிய போதைப் பொருள் ஒழிப்பு வேலைத்திட்ட முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் அண்மையில் சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கபீர், உதவிப்பிரதேச செயலாளர் ஆசீக், தேசிய அபாயகர ஔடத கட்டுப்பாட்டு அதிகார சபை உத்தியோகத்தர் பீ.எம்.றஷாட், நம்பிக்கையாளர் சபைத் தலைவர் கே.எம்.முஸ்தபா, மஜ்லீஸ் அஷ்ஷுறா தவிசாளர் ஐ.ஏ.ஜப்பார் உட்பட பொலிஸ் உத்தியோகத்தர்கள், வர்த்தக சங்க பிரதிநிதிகள், பள்ளிவாசல் தலைவர்கள்,நிறுவனங்களின் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.