Ads Area

சம்மாந்துறைக் கோட்ட தமிழ்-முஸ்லிம் மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு

ஏ.ஜே.எம்.ஹனீபா.

மனிதநேய நற்பணி பேரவை சம்மாந்துறை சிறிலங்கா அமைப்பினதும் ஸம் ஸம் பௌன்டேஷன் அமைப்பினதும் ஏற்பாட்டில் சம்மாந்துறை கோட்டத்திலுள்ள வருமானம் குறைந்த 300 தமிழ்,முஸ்லீம் மாணவர்களுக்கு தலா 3000/- பெறுமதியான கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு அண்மையில் சம்மாந்துறை அப்துல் மஜீட் நகர மண்டபத்தில் மனிதநேய நற்பணி பேரவை சம்மாந்துறை சிறிலங்கா அமைப்பின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் தேசமான்ய இர்ஷாட் ஏ காதர் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதீதியாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் கலந்து சிறப்பித்தார்.

கௌரவ அதீதிகளாக சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹுதுல் நஜீம், ஸம் ஸம் பௌன்டேஷன் அமைப்பின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களான எம்.ஆர்.எம்.கியாஸ் ரவூப், எம்.எல்.எம்.பாஸிர், எம்.ஆர்.எம்.இர்ஷாத், இர்பான் ஜுனைதீன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். விஷேட அதீதிகளாக சம்மாந்துறை ஆதார வைத்திய சாலையின் அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.இஸ்ஸதீன், கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.சபூர்தம்பி,நம்பிக்கையாளர் சபைத் தலைவர் கே.எம்.முஸ்தபா உட்பட அதிபர்கள் ,ஆசிரியர்கள்,பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.









Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe