காரைதீவு நிருபர் - சகா.
எமது பிராந்தியத்தில் சுமுகமாகவுள்ள தமிழ் முஸ்லிம் நல்லுறவை சீர்குலைக்க வெளியிலிருந்து அந்நிய சக்திகள் ஊடுருவியுள்ளன. எந்த காரணம் கொண்டும் பொதுமக்கள் அதற்கு இடமளிக்கக்கூடாது என சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பிரிவு பொறுப்பதிகாரி எ.எம்.நௌபர் தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக காரைதீவுப்பிரதேசத்தில் இடம்பெற்றுவரும் வழிப்பறி கொள்ளை களவு இனவிரோத செயற்பாடு போதைப்பொருள்பாவனை தொடர்பில் பொலிசாருக்கும் ஆலய பள்ளிவாசல் சமூகத்தலைவர்களுக்கும் பொலிஸாருக்குமிடையிலான சந்திப்பொன்றை காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் கி.ஜெயசிறில் ஏற்பாடு செய்திருந்தார். அந்தச்சந்திப்பு சபைத்தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் விபுலாநந்தா பொதுநூலகத்தில் நடைபெற்றுள்ளது.
அங்கு சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பிரிவு பொறுப்பதிகாரி எ.எம்.நௌபர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
இந்துக்கள் மாடறுப்பதையோ மாடு சாப்பிடுவதையை தவிர்ப்பவர்கள். அப்படிப்பட்ட சமூகத்தின் ஆலயங்களுக்கு அருகாமையில் மாட்டெலும்புகளைப் போடுவதை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது இனமுரண்பாட்டை இலகுவாக தோற்றுவிக்கும். தவிசாளர் அடிக்கடி இவ்வாறான தீய நடவடிக்கைகள் பற்றி எம்மிடம் முறையிடுவார்.காரைதீவின் தவிசாளர் துடிப்புள்ள நல்ல இளைஞர். சுறுசுறுப்பாக இயங்கி இன உறவுக்காக செயற்பட்டுவருபவர். அவரது தலைமைத்துவத்தில் இங்கு தமிழ், முஸ்லிம் உறவு மேலும் வலுப்பெறும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது எனவும் குறிப்பிட்டார்.