ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகிப்பதற்கு பாராளுமன்றத்தில் நம்பிக்கை இருப்பதாக தெரிவிக்கும் பிரேரணை பெரும்பான்மை வாக்குகளுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த பிரேரணை மீதான வாக்கெடுப்புக்கு ஆதரவாக 117 வாக்குகள் கிடைத்திருந்தன.
இந்த வாக்கெடுப்பின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 14 பேர் ஆதரவாக் வாக்களித்ததுடன், மக்கள் விடுதலை முன்னணியில் உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்ற அமர்வு இன்று (12) பகல் 1 மணிக்கு ஆரம்பமானது.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ பாராளுமன்றத்தில் இந்த பிரேரணையை சமர்பித்திருந்ததுடன், மங்கள சமரவீர ஆமோதித்து வழிமொழிந்தார்.
ரணிலுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளதை நிரூபிக்கும் வகையில் அமைந்த, நம்பிக்கைப் பிரேரணையை சபையில் சமர்ப்பித்து உரை நிகழ்த்தும் போதே, மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நாடு வீழ்ச்சியை நோக்கி பயணிக்கிறது. அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்கள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பாடசாலை மாணவர்களுக்கான இலவச சீருடையும் வழங்கப்படாதுள்ளது. எனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசென இவற்றை வேடிக்கை பார்க்காது, ஒக்டோபர் 26 ஆம் திகதிக்கு முன்னர் காணப்பட்ட நிலையை நாட்டில் மீண்டும் ஏற்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
எவ்வாறாயினும் இன்றைய பாராளுமன்ற அமர்வினையும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினர் புறக்கணிக்கனித்திருந்தனர்.