மக்கள் நண்பன் - சம்மாந்துறை அன்சார்.
அலி இப்றாஹிம் என்ற சவுதி அரேபியாவைச் சேர்ந்த ஒரு முதியவர் கடந்த 30 வருடங்களாக வைத்தியசாலைக்குச் சென்று அங்குள்ள நோயாளிகளை நலம் விசாரித்து அவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்து அவர்களை அன்பாக கவனித்து வருகின்றார்.
சவுதி அரேபியா அல் - மஜ்மா பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு சாதாரண விவசாயியான அலி-இப்றாஹிம் அல் மூஸா என்ற இந்த முதியவர் அல் - மஜ்மா நகரில் உள்ள ஹவ்தத் சுதைர் என்ற வைத்தியசாலைக்கு தொடர்ச்சியாக சென்று அங்குள்ள நோயாளிகளை நலம் விசாரித்து அவர்களுக்கு வேண்டிய உதவிகளையும் செய்து வருகின்றார். இவ்வாறு அவர் கடந்த 30 ஆண்டுகளாக செய்து வருவதாக கூறப்படுகின்றது.
வாகணம் ஓட்ட முடியாத அளவுக்கு வயதில் தளர்ந்து போன அந்த முதியர் தனது மகனின் உதவியுடன் தினமும் வைத்தியசாலைக்கு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. தனது தந்தையின் ஆசைக்காக அவரது மகன் தினமும் காலையில் அவரை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதனையும் பின்னர் வீட்டுக்கு அழைத்துச் செல்வதனையும் வழக்கமாகக் கொண்டிருப்பதாகவும் அல் - அரேபியா செய்தி வெளியிட்டுள்ளது.