காரைதீவு நிருபர் சகா
நான் கௌரவ அளுநரின் கூற்றுக்களையும் ஆலோசனைகளையும் ஏற்றுக் கொண்டே நான் இங்கு வருகை தந்திருக்கின்றேன். அவரது ஆலோசனைகளை அமுல்படுத்துவது தனியே என்னால் மாத்திரம் செய்ய முடியாத காரியமாகும். எனவே நாம் அனைவரும் ஒன்றுபட்டால்தான் இந்த குறிக்கோளை நாங்கள் அடைய முடியும் என பட்டிருப்பு வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி ந.புள்ளநாயகம் தெரிவித்தார்
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்
நான் இந்த வலயத்திற்கு வரும் போது வலயத்தினுடைய வெளியீடுகளை என்னிடம் கௌரவ ஆளுநர் அவர்கள் கோடிட்டு காட்டியிருந்தார். இதில் உயர்வு காண வேண்டும் அதேபோல் மேம்மேலும் பட்டிருப்பு கல்வி வலயத்தில் கணித விஞ்ஞான துறையில் பல்கலைக் கழகத்திற்கு கூடுதலான மணவர்கள் அனுமதி பெறுவதற்காக செயற்பட வேண்டும். மற்றும் எமது பிரதேசத்தில் தேசியபாடசாலைக்கு ஒத்ததான ஒரு சிமாட் பாடசாலையை உருவாக்குவதற்குரிய நடவடிக்கையினை மேற் கொள்ள வேண்டும் எனவும் அதனை பார்வையிடுவதற்கு அவர் வருகை தருவதாக என்னிடம் கூறியுள்ளார்.
அது மாத்திரமல்ல மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரியதொரு வலையமாக இருப்பதால் இவ் வலயத்தின் செயற்பாடுகள் அனைத்தும் மிகவும் முன்னேற்றகரமாக முன்னெடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார். அந்த வகையில் கௌரவ அளுநரின் கூற்றுக்களையும் ஆலோசனைகளையும் ஏற்றுக் கொண்டே நான் இங்கு வருகை தந்திருக்கின்றேன். அவரது ஆலோசனைகளை அமுல்படுத்துவது தனியே என்னால் மாத்திரம் செய்ய முடியாத காரியமாகும் எனவே இங்கிருக்கின்ற அனைவரும் ஒன்று சேர்ந்துதான் இந்த காரியத்தினை நாங்கள் செய்து முடிக்க வேண்டும். இவ்வாறு செயற்பட்டால் மாத்திரமே நாங்கள் எமது குறிக்கோளினை எய்யமுடியும்