(காரைதீவு நிருபர் சகா)
எமது பிராந்தியத்தில் சுமுகமாகவுள்ள தமிழ் முஸ்லிம் நல்லுறவை சீர்குலைக்க வெளியிலிருந்து அந்நியசக்திகள் ஊடுருவியுள்ளன. எந்தக்காரணம்கொண்டும் பொதுமக்கள் அதற்கு இடமளிக்கக்கூடாது.
அண்மைக்காலமாக காரைதீவுப்பிரதேசத்தில் இடம்பெற்றுவரும் வழிப்பறி கொள்ளை களவு இனவிரோதசெயற்பாடு போதைப்பொருள்பாவனை தொடர்பில் பொலிசாருக்கும் ஆலய பள்ளிவாசல் சமுகத்தலைவர்களுக்கும் பொலிசாருக்குமிடையிலான சந்திப்பொன்றை காரைதீவுபிரதேசசைபத்தவிசாளர் கி.ஜெயசிறில் ஏற்பாடுசெய்திருந்தார்.
அந்தச்சந்திப்பு இன்று(11) மாலை சபைத்தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் விபுலாநந்தா பொதுநூலகத்தில்; நடைபெற்றது.
அங்கு பொலிஸ் பொறுப்பதிகாரி மேலும் பேசுகையில்;:
காரைதீவில் அண்மையில் இடம்பெற்ற 6தாலிக்கொடிச்சம்பவத்தில் தொடர்புபட்ட குற்றவாளியை நாம் கைதுசெய்திருக்கிறோம். அவற்றை அவர் விற்பனைசெய்த காத்தான்குடி நகையகத்திற்கு எமது பொலிஸ்பொறுப்பதிகாரி சென்றிருக்கிறார். குறித்த நகைகைளை உரியவர்களிடம் வெகுசீக்கிரம் ஒப்படைக்கவிருக்கிறோம்.
மாலை அறுத்துச்சென்ற வீரமுனையைச்சேர்ந்த ஒரு நபரை நாம்கைதுசெய்யும்போது கையில் கிரனைட் இருந்தது.
இந்துக்கள் மாடறுப்பதையோ மாடு சாப்பிடுவதையை தவிர்ப்பவர்கள். அப்படிப்பட்ட சமுகத்தின் ஆலயங்களுக்கு அருகாமையில் மாட்டெலும்புகளைப் போடுவதை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ளமுடியாது. இது இனமுரண்பாட்டை இலகுவாகத்தோற்றுவிக்கும். தவிசாளர் அடிக்கடி இவ்வாறான தீயநடவடிக்கைகள் பற்றி எம்மிடம் முறையிடுவார்.
காரைதீவின் தவிசாளர் துடிப்புள்ள நல்ல இளைஞர். சுறுசுறுப்பாக இயங்கி இனஉறவுக்காக செயற்பட்டுவருபவர். அவரது தலைமைத்துவத்தில் இங்கு தமிழ்முஸ்லிம் உறவு மேலும் வலுப்பெறும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.
இஸ்லாமிய மார்க்கத் தலைவர்கள் வெள்ளி குத்பாவில் இவ்வாறு செய்தல்கூடாது பிறமதத்தை மதிக்கச்சொல்லித்தான் நபிகள் கூறியுள்ளார் என்று அறிவுறுத்தவேண்டும்.
அண்மையில் 227கோடி ருபா பெறுமதியான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. இன்றேல் அதுவும் இப்படி வந்து எமது சமுகங்களைசீரழிக்கும்.
சம்மாந்துறையில் ; செல்போனில் தவறானவழியில் பெண்களுடன்தொடர்புகொண்டு மயக்கி அவர்களின் நிர்வாணப்படங்களைப்பெறுகிறார்கள். இப்படி மூவரைக்கைதுசெய்து நீதிமன்றில் நிறுத்தியுள்ளோம்.
கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில் காரைதீவால் சென்றுகொண்டிருந்த பஸ்சொன்றை மறித்துச் சோதனையிட்டபோது அதில 4முஸ்லிம் இளைஞர்கள் போதையிலிருந்தனர்.அவர்களைக்கைதுசெய்தோம்.
சம்மாந்துறையில் 14வயது சிறுமி 8மாத கர்ப்பிணி. நம்புவீர்களா? உண்மை அவரது சித்தப்பா அவரை இந்தநிலைக்கு ஆளாக்கியுள்ளார். இளவயதுத்திருமணம் வரவர அதிகரிக்கிறது.
காரைதீவிலுள்ள தவறணையில் மதுவாங்குவோரை நாம் சட்டப்படி கட்டுப்படுத்தமுடியாது. குடிப்பவர்களை நாம் கைதுசெய்யமுடியாது. ஆனால் அவர்களால் அமைதிக்கு குந்தகம் விளைவித்தால் அல்லது ஏனையோருக்கு இடைஞ்சல் செய்தால் மட்டுமே கைதுசெய்யமுடியும்.
இவற்றையெல்லாம் தனியே போலிசார் மாத்திரம் தடுத்துவிடமுடியாது. பொதுமக்களின் பூரண ஒத்துழைப்பு தேவை.என்றார்.
சமயத்தலைவர்கள் இனஉறவுபற்றி கருத்துரைத்தனர். நன்றியுரையை உபதவிசாளர் எ.ம்.ஜாகீர் நிகழ்த்தினார்.