ஏ.ஜே.எம்.ஹனீபா.
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் கல்வி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவில் சமுர்த்தி நிவாரணம் பெறும் குடும்பங்ளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட உயர்தரம் கற்கும் 51 மாணவ, மாணவிகளுக்கு சிப்தொற புலமைப்பரிசில் காசோலை வழங்கும் நிகழ்வு அண்மையில் சம்மாந்துறை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் தலைமைப்பீட சமுர்த்தி முகாமையாளர் ஏ.எல்.எம்.சலீம் அவர்களின் நெறிப்படுத்தலில் பிரதேச செயலாளர் தேசபந்து எஸ்.எல்.எம்.ஹனீபா தலைமையில் நடைபெற்றது.
விஷேட அதீதிகளாக உதவிப்பிரதேச செயலாளர் ஆசீக், கணக்காளர் மற்றும் சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பெற்றோர்கள்,மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.