அன்சார் காசீம்.
சம்மாந்துறைப் பிரதேசத்தில் “கம்பெரலிய” வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் வீதிப் புனரமைப்புப் பணிகளை திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் இன்று(14) நேரில் சென்று பார்வையிட்டதுடன், பிரதேச மக்களுடன் வீதிப் புனரமைப்பு சம்பந்தமாகவும் கலந்துரையாடினார்.
அரசயடி வீதி, பெரிய பள்ளி வீதி, வக்கடி வீதி, அம்பாறை 15ஆம் வீதி, சம்மாந்துறை 12ஆம் வீதி, யுனிவர்சிட்டி கிழக்கு வீதி, சென்நெல் கிராமம் அஸ்மான் பாடசாலை வீதி ஆகிய வீதிப் புனரமைப்புப் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூரின் முயற்சியின் பலனாக சம்மாந்துறைப் பிரதேசத்தில் “கம்பெரலிய” வேலைத்திட்டத்தின் கீழ் சுமார் 100 மில்லியன் ரூபாய் செலவில் 31 வீதிகள் புனரமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.