Ads Area

ரணிலின் உரையை இனவாத ரீதியாக மாற்றும் செயற்பாட்டில் மஹிந்த..!


ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் நேற்று வெளியிட்ட கருத்து தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையில் உள்ள இரகசிய ஒப்பந்தத்தின் ஒரு உரையாக இருக்கலாம் என மஹிந்த தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

புதிய அரசியலமைப்பை தயாரித்து சமர்ப்பிக்கும் தங்கள் நிலைப்பாட்டில் மாற்றமில்லை என ரணில் விக்ரமசிங்க நேற்று தெரிவித்துள்ளார். புதிய அரசியலமைப்பின் மூலம் ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பின் இனவாத அவசியத்தை நிறைவேற்ற முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய தமிழ் தேசிய கூட்டமைப்புடன் ஏற்படுத்தியுள்ள இரகசிய ஒப்பந்தம் என்ன என்பது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி உடனடியாக நாட்டிற்கு வெளிப்படுத்த வேண்டும் என மஹிந்த தரப்பை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனினும் புதிய அரசியலமைப்பிற்கமைய இனவாதத்தை நிறைவுக்கு கொண்டுவரும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றதே தவிர நாட்டை பிரிக்க நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. நிறைவேற்று ஜனாதிபதி முறை இதில் ஒழிக்கப்படும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe