ஆள் அடையாளங்களை உறுதி செய்யும் வகையில் முகத்தை முழுமையாக மூடி ஆடை அணிவதை இலங்கை தடை செய்துள்ளது.
ஈஸ்டர் அன்று இலங்கையில் பல்வேறு பகுதிகளில் நடந்த குண்டுவெடிப்பில் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அதனை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பிரான்சில்தான் முதல்முதலாக அதாவது 2011ஆம் அண்டு முழுமையாக முகத்தை மூடி ஆடை அணிவது தடை செய்யப்பட்டது. இதனை ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றமும் 2014 ஜூலையில் உறுதி செய்தது.
பின் 2018 ஆகஸ்ட் மாதம், டென்மார்க்கில் முழுமையாக முகத்தை மூடி ஆடை அணிவது தடை செய்யப்பட்டது. இது அந்த நாட்டில் போராட்டங்களுக்கு வழிவகுத்தது.
நெதர்லாந்து 2018 ஜுனில் முகத்தை முழுமையாக மூடி அடை அணிவதை தடை செய்தது. பொது வீதிகளில் முகத்தை முழுமையாக மூடி ஆடை அணியலாம். ஆனால்,பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் பொது போக்குவரத்தில் பயணிக்கும் போது அவ்வாறு செல்ல முடியாது.
ஜெர்மனியில் கார் ஒட்டும் போது முழுமையாக முகத்தை மூட கூடாது.
ஆஸ்திரியாவில் அக்டோபர் 2017ஆம் ஆண்டு பள்ளிகள், நீதிமன்றங்களில் முழுமையாக முகத்தை மூடி ஆடை அணிவது தடை செய்யப்பட்டது.
பெல்ஜியத்தில் முகத்தை மூடி ஆடை அணிவது ஜூலை 2011ஆம் ஆண்டு தடை செய்யப்பட்டது. பெல்ஜியம் சட்டப்படி பொது இடங்களான பூங்காக்கள் மற்றும் வீதிகளில் முகத்தை மூடி ஆடை அணிய கூடாது.
நார்வேயில் ஜூன் 2018ஆம் ஆண்டு கல்வி நிலையங்களில் முகத்தை மூடி ஆடை அணிவதற்கு தடை விதிக்கும் சட்ட மசோதா இயற்றப்பட்டது.
பல்கேரியா நாடாளுமன்றம் முகத்தை மூடி ஆடை அணியும் பெண்களுக்கு சலுகைகளை ரத்து செய்யும் சட்டத்தை இயற்றியது.
அல்ஜீரியாவில் அரசு ஊழியர்கள் முகத்தை முழுமையாக மூடுவது அக்டோபர் 2018இல் தடை செய்யப்பட்டது.
சீனாவில் சின்ஜியாங்கில் பொது இடங்களில் முகத்தை முழுமையாக மூடி ஆடை அணிவது, நீளமாக தாடி வளர்ப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
நன்றி - BBC TAMIL