கடந்த ஒரு வாரமாக நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலைகளில் தம்மை அர்ப்பணித்து நாட்டையும், மக்களையும் பாதுகாப்பதற்காய் முப்படையினரும் அயராது பாடுபட்டுவருகின்றனர்.
கல்முனை பிராந்தியத்தில் மேற்படி பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் படையினர்களை கல்முனையன்ஸ் போரம் நேரில் சந்தித்து கல்முனை மக்கள் சார்பாக நன்றிக்காணிக்கைகள் செலுத்தியதோடு படையினருக்கு சிற்றுண்டிகளும், குளிர்பானங்களும் வழங்கிவைத்தது.