Ads Area

சம்மாந்துறையில் பயங்கரவாதத்தை பந்தாட படையினருக்கு துனைநின்ற சம்மாந்துறை மக்கள்.

மக்கள் நண்பன் - சம்மாந்துறை அன்சார்.

அம்பாறை மாவட்டத்தில் கடந்த இரு நாட்களுக்கு முன் நடாத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது, சம்மாந்துறையிலுள்ள செந்நெல் கிராம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து பெருந்தொகையான வெடிபொருட்களும், ஆயுதங்களும், ஐஸ்.ஐஸ். தீவிரவாத அமைப்பினரின் வாசகங்கள் அடங்கிய கொடிகளும் பாதுகாப்புப் பிரிவினரால் கைப்பற்றபட்டு, இதனோடு தொடர்புபட்ட சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.

கடந்த 21ம் திகதி இலங்கையில் நடாத்தப்பட்ட மிலேச்சத்தனமான தற்கொலைத் தாக்குதலினால் ஏராளமான அப்பாவி உயிர்கள் பலியெடுக்கப்பட்டது, கிரிஸ்தவ தேவாலயங்கள் சிதைக்கப்பட்டது, வெளிநாட்டுப் பிரஜைகளும் அநியாயமாக கொல்லப்பட்டனர் இதனால் முழு நாடும், உலகும் சோகமயமானது.

இத் தாக்குதலை நாங்கள்தான் நடாத்தினோம், எங்களது இலங்கை அமைப்பினர்தான் நடாத்தினார்கள் என உலக பங்கரவாத அமைப்பான ஐஸ்.ஐஸ் அமைப்பினர் உரிமை கோரியிருந்தனர் இது இலங்கையில் ஏனை சமூகத்தினரோடு ரத்த உறவுகளாக வாழ்ந்து வரும், இலங்கை அரசின் சட்டதிட்டங்களை மதித்து வாழ்ந்து வரும் இலங்கை வாழ் முஸ்லிம்கள் மத்தியில் கவலையைத் தோற்றுவித்திருந்தது இதனால் விழிப்படைந்து கொண்ட இலங்கை முஸ்லிம்கள் இந் நாட்டிலிருந்து தீவிரவாதத்தை விரட்டியடிக்க முழுக் கவனம் செலுத்தினர், சந்தேகத்திற்கு இடமான இடங்களையும், நபர்களையும் பற்றி படைத்தரப்பினருக்கு தகவல் கொடுத்து இன்று வரைக்கும் படையினருக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.

அந்த வகையிலேயே கல்முனை-நிந்தவூர்-சம்மாந்துறை-சாய்ந்தமருது போன்ற ஊர்களில் வாடகை அடிப்படையில் குடியிருந்து வந்த சந்தேக நபர்கள் தொடர்பிலும் பொதுமக்களினால் கவனம் செலுத்தப்பட்டு படையினருக்கு அவர்கள் தொடர்பாக தெரிவிக்கப்ட்டதனை அடுத்தே அவர்கள் கைது செய்யப்பட்டும், கொல்லப்பட்டும் அழிக்கப்பட்டு வருகின்றனர்.

சாய்ந்தமருதில் குடியிருந்த தீவிரவாத நோக்கம் கொண்ட கும்பலை சாய்ந்தமருது பள்ளிவாசலே படையினருக்கு அறிவித்திருந்தனர் இதே போல் கண்டியில் பெண் ஒருவர் தீவிரவாதிகளோடு தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகித்து அவரின் பெற்றோரே அவரை பொலிசாருக்கு காட்டிக் கொடுத்து தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்மாந்துறை செந்நெல் கிராமத்தில் காத்தான்குடியைச் சேர்ந்த ஒருவர் வீடு ஒன்றை வாடகைக்குப் பெற்று வசித்து வந்திருக்கின்றார் நேற்றைய தினம் குறித்த அந்த வீட்டிற்கு வடி ( சிறிய ரக லொறி) ஒன்று வந்து போயுள்ளது இதன் பின்னர் வாடகைக்கு குடியிருந்தவர்களின் நடத்தையிலும் வழமைக்கு மாறான மாற்றம் தென்பட்டுள்ளதால் அவர் மீது சந்தேகம் கொண்டு வீட்டு உரிமையாளராலும், பொதுமக்களாலும் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனையெடுத்து ஸ்தளத்திற்கு சம்மாந்துறை பொதுமக்களும், படைத்தரப்பினரும் உடனடியாக விரைந்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ததோடு, அவர்களின் ஆயுதப் பொருட்களையும் கைப்பற்றியிருந்தனர்.

சம்மாந்துறையில் தங்கியிருந்த தீவிரவாத சக்திகள் தொடர்பாக விழிப்படைந்து கொண்ட சம்மாந்துறை  மக்கள் தற்போது சம்மாந்துறையில் உள்ள ஏனைய பிரதேசங்கள், வெறுமையான வளவுகள், கட்டிடங்கள், சந்தேகத்திற்கிடமான நபர்கள், குடியேற்றத் திட்டங்கள் தொடர்பாக அவதானம் செலுத்தி வருகின்றனர்.

இந்த நாட்டில் தீவிரவாதிகளுக்கோ, தீவிரவாதத்துக்கோ ஒரு போதும் இடமில்லை அவர்கள் முஸ்லிம் சமூகத்தவர்களாக இருந்தாலும் சரியே என்பதை இலங்கை முஸ்லிம்கள் பறைசாற்றி வருவது மகிழ்ச்சியைத் தருகின்றது.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe