கடந்த ஞாயிற்றுக் கிழமை நாட்டில் பல பகுதிகளில் இடம் பெற்ற மனித நேயமற்ற குண்டுத் தாக்குதல் காரணமாக அசாதாரண சூழ்நிலையால் அவதியுறும் இலங்கையில் தற்போது நாடளாவிய ரீதியில் வீதித் தடைகளை ஏற்படுத்தி வாகனங்கள் மற்றும் நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்கள்.
தயவு செய்து வீட்டைவிட்டு ஏதாவது தேவைகளுக்காக வெளியில் செல்லும் போது தொழுகைக்காக செல்வதாக இருந்தாலும் ஆண்களும்-பெண்களும் தங்களது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் அடையாள அட்டைகளை கண்டிப்பாக மறந்து விடாமல் எடுத்துச் செல்லுங்கள் என வேண்டப்படுகின்றார்கள்.
நாட்டில் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கும் சோதனை நடவடிக்கை முஸ்லிம்களை மையப்படுத்தி அதிகளவில் இடம் பெறுவதால் எக்காரணம் கொண்டும் வெளியில் செல்ல வேண்டாம் அத்தோடு பெண்களும் தங்களது முகம்களை மறைத்துக் கொண்டு வெளியில் செல்ல வேண்டாம் எனவும் வேண்டப்படுகின்றனர்.
வாகணங்களில் செல்லும் போது கூட உங்கள் வாகணங்களின் ஆவணங்களையும் மறந்து விடாமல் கூடவே எடுத்துச் செல்லுங்கள் அது மோட்டார் சைக்கிளாக இருந்தாலும் சரியே அத்தோடு வாகணங்களை எங்காவது தரித்து வைக்கும் போது அதில் உங்கள் பெயர் மற்றும் தொலைபேசி இலக்கங்களையும் எழுதி வைத்துச் செல்லுங்கள் பொதுமக்கள் வேண்டப்படுகின்றீர்கள்.