VPN பாவித்து சட்டவிரோதமாக தடைசெய்யப்பட்ட செயலில் ஈடுபட்ட பல பேர் இன்று விசாரணைகளின்றி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்களில் பலர் கொழும்பிலும், ஏனையோர் குறிப்பாக பெண்கள் உட்பட கிழக்குமாகாண அம்பாறை,திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் ஏனைய இடங்களிலும் கைதாகியுள்ளனர்.
அதிகளவான இனவாத பதிவுகள் கிழக்குமாகாண தென்கிழக்கு பகுதிகளில் பரவுகின்றமை குறித்து பொலிசார் விஷட கவனம் செலுத்துகின்றனர்.
அதிகளவான இனவாத பதிவுகள் கிழக்குமாகாண தென்கிழக்கு பகுதிகளில் பரவுகின்றமை குறித்து பொலிசார் விஷட கவனம் செலுத்துகின்றனர்.
இனவாத குழுக்களின் தூண்டுகோலுக்கிணங்க ஒரு சில மர்ம நபர்கள் ஒண்றினைந்து சமுக வலைத்தளங்களில் சட்டவிரோதமான முறையில் பதிவுகளை மேற்கொள்கின்றனர்.இவை வதந்தியான செய்திகள் எனவும் இவ்வாறு சட்டவிரோத முறையில் சமூக ஊடகங்களை பயன்படுத்துவோருக்கு பிணையின்றி கைது செய்யவும் ஆணைபிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தற்போது நாட்டில் நிலவிக்கொண்டிருக்கும் குழப்பநிலை விரைவில் நிவர்த்தி செய்யப்படும் எனவும் இக்காலப்பகுதிக்குள் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டவர்கள் மீள்விசாரணைக்காக சந்தேகத்தின் பெயரில் விசாரணைகளுக்கு முகம் கொடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.