கடந்த 21ம் திகதி இலங்கையில் இடம்பெற்ற மிருகத்தனமான பயங்கரவாத தாக்குதலில் 250 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர் இதில் 40 க்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பிரஜைகளும் அடங்குவர்.
இச் சம்பவத்தினை அடுத்து இலங்கையில் தங்கியிருந்த வெளிநாட்டுப் பிரஜைகள் அனைவரும் நாட்டை விட்டு வெளியேறும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
தற்போது நாட்டில் தீவிரப்படுத்தப்பட்டுள்ள சோதனைகள் நடவடிக்கைகளில் இந்தியா, எகிப்து, பாகிஸ்தான் போன்ற பிரஜைகள் விசாரனைக்காக கைது செய்யப்பட்டு வரும் நிலையில் சவுதி அரேபியா இலங்கையில் தங்கியுள்ள தனது நாட்டுப் பிரஜைகளை இலங்கையை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளது.
இதேவேளை இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இலங்கைக்கு விஜயம் செய்வது தொடர்பில் பல நாடுகள் தமது நாட்டுப் பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.