காரைதீவு சகா.
ஜ.எஸ்.ஜ.எஸ்.பயங்கரவாதி சஹ்ரானின் பெயரை கல்முனை ஆதார வைத்தியசாலையுடன் இணைத்து பொய்ச்செய்தி வெளியிட்டு பரப்பியவர்களைத் தேடி பொலிஸார் வலைவீசியுள்ளனர்.
ஜ.எஸ்.ஜ.எஸ்.பயங்கரவாதி சஹ்ரானின் பெயரை கல்முனை ஆதார வைத்தியசாலையுடன் இணைத்து பொய்ச்செய்தி வெளியிட்டு பரப்பியவர்களைத் தேடி பொலிஸார் வலைவீசியுள்ளனர்.
மேலும் சுகாதார அமைச்சிற்கும் தாதிய உத்தியோகத்தர்கள் சங்கத்திற்கும் முறையிடப்பட்டுள்ளது. அதற்கமைய இருதரப்பினரும் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களைத் தேடி வலை விரித்துள்ளது. இன்றோ நாளையோ அவர்கள் கைது செய்யப்படலாமெனத் தெரியவருகிறது. அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படாவிடின் வீதிக்கு இறங்கவிருப்பதாக ஊழியர்கள் கூறுகின்ற அதேவேளை தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு அறிவிப்போம் என நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
அப்படி அங்கு ஒரு சம்பவம் நடக்கவில்லையெனவும் அப்படி எந்த தாதிய உத்தியோகத்தரை இடைநிறுத்தவும் இல்லையெனவும் வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவதூறு ஏற்படுத்தும் நோக்கில் வெளியிடப்பட்ட அந்தச்செய்தி பொய்யானது எனவும் போலியானது எனவும் கூறி முறைப்பாட்டைத் தொடர்ந்துள்ளது.
இந்தப்போலிச் செய்தியை வெளியிட்டவர்கள் பரப்பியவர்கள் என்ற போர்வையில் சுமார் 18 பேரின் பெயர்கள் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் பங்கரவாதத்துடன் தொடர்புடைய போலி இணைய சமுகவலைத்தர முறைப்பாட்டுப்பிரிவுக்கும் இன்று முறையிடவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.