தேசிய போதைப்பொருள் தடுப்பு வாரத்தின் இறுதி நாள் இன்றாகும். இதனை முன்னிட்டு தேசிய நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் நடைபெற்றது.
இதனை முன்னிட்டு சுகததாஸ உள்ளக அரங்கில் நடைபெற்ற இறுதிநாள் நிகழ்வுகளுக்கு வருகை தந்திருந்தவர்கள் போதைப் பொருள் தடுப்பு உறுதிமொழியை வழங்கினர்.
இங்கு ஜனாதிபதியும் உரையாற்றினார்.
போதைப் பொருள் தொடர்பான போராட்டம் சில பெறுபேறுகளை பெற்றுக் கொண்டுள்ளதாக இங்கு ஜனாதிபதி தெரிவித்தார். அதில் சவால்களும் உள்ளமையை அவர் சுடடிக்காட்டினார். பிள்ளைகளைப் பாதுகாப்பதற்கு தலைமைத்துவம் வழங்குவதாக தெரிவித்த ஜனாதிபதி மரண தண்டனை நிறைவேற்றுவதில் தாம் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் விளக்கமாக எடுத்துரைத்தார். கடந்த ஆட்சி காலத்தில் புகைத்தலுக்கு எதிராக போராடிய தனக்கு ஏற்பட்ட இன்னல்கள் தொடர்பிலும் ஜனாதிபதி இங்கு நினைவுகூர்ந்தார்.
இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியல்வாதிகளின் செயற்பாடுகளையும் இதன்போது விமர்சித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.