இலங்கை முஸ்லிம்கள் போராக்களின் உலக மாநாட்டை இலங்கையில் நடத்தியமைக்காக இலங்கை முஸ்லிம்கள் போராக்களுக்கு நன்றி சொல்லத்தான் வேண்டும்.
ஸஹ்ரானின் மடத்தனமான செயலுக்குப்பின் இலங்கையில் பலர் தாம் வழமையாக அணிந்து வந்த ஜுப்பா மற்றும் பங்காளி உடையை தவிர்ந்து கொண்டார்கள். அதே போல் பல பெண்கள் தம் அபாயாக்களை களட்டிவிட்டு சல்வார் கமீஸ், ஷேட் ஜீன்ஸ், பெயருக்கு தலையில் ஸ்காப் என மாறினர். இன்னும் பலர் கலர் அபாயாவுக்குள் புகுந்தனர்.
போராக்களின் கொள்கை என்ன என்பதை நாட்டின் முஸ்லிமல்லாத மக்கள் தெரிந்திராவிட்டாலும் அவர்கள் ஷீயா பிரிவு முஸ்லிம்கள் என்றே தெரிந்துள்ளனர். பலரை பொறுத்த வரை அவர்களும் முஸ்லிம்களும்.
ஆக இந்த சூழலில் இலங்கையை தைரியமாக தமது மாநாட்டுக்காக தெரிவு செய்த போராக்களின் இந்த மாநாடு மூலம் முஸ்லிம்களின் ஆடைகள் மீதான கோபப்பார்வை குறைக்கப்பட்டுள்ளமைக்காகவும் ஸஹ்ரானின் ஈனச்செயல் காரணமாக இழந்து போன முஸ்லிம்களின் உடைகளுக்கான கவுரவத்தையும் இந்நிகழ்வு மீட்டுள்ளமைக்காக நாம் நன்றி சொல்லத்தான் வேண்டும்.
முபாறக் அப்துல் மஜீத் - உலமாக் கட்சி.