வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்களின் வாக்குதான் மிகவும் பெறுமதியான வாக்காகும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு- கிழக்கு மக்கள் தமக்கு நன்மைகளை செய்யக்கூடிய ஒருவருக்கே வாக்களிக்க வேண்டும் என்று கல்முனை சுபத்ராராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்க ரத்ன தேரர் தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “வடக்கு கிழக்கிலுள்ள சிறுபான்மையின மக்கள் தற்போதும் பெரும் கஷ்டத்துடன் வாழ்கின்றனர். சிறுபான்மை மக்களது பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்பட வேண்டும்.
ஜனாதிபதி தேர்தலில் வடக்கு- கிழக்கு மக்கள் தமக்கு நன்மைகளை செய்யக்கூடிய ஒருவருக்கே வாக்களிக்க வேண்டும். உங்கள் வாக்கு பலமான வாக்கு அதனை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்களின் வாக்குதான் மிகவும் பெறுமதியான வாக்காகும்” என மேலும் தெரிவித்தார்.