தகவல் - டொக்டர் சியாட் (MBBS)
சம்மாந்துறை ஆதார வைத்திய உளநல பிரிவுக்கு நீண்டகாலமாக தனியான வைத்தியர் ஒருவர் நியமிக்கப்படவில்லை. அண்மையில் டாக்டர் ஆர். குருபரன் அவர்கள் உளநல துறையில் விஷேட பயிற்சிபெற்று அதன் பிற்பாடு இப்பிரிவுக்கு நியமிக்கப்பட்டுள்ளார். அதன் பிற்பாடு சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் உளநல பிரிவு திறண்பட இயக்குகின்றது. தற்போது ஏனைய வைத்தியசாலைகளுக்கு கிளினிக்கிற்குச் சென்றவர்கள் மீண்டும் எமது வைத்தியசாலைக்கு இச் சேவையைப் பெறுவதற்கு வருகை தந்துகொண்டிருக்கின்றனர்.
உளநல பிரிவு தாதிய உத்தியோகத்தர் , உளநவ வளவாளர்,எஸ்.எம்.ஜமான் , கல்விப் பிரதிப்பணிப்பாளர், மாவட்ட போதைப்பொருள் கட்டுப்பாட்டு அதிகாரி, மருந்துகள் மற்றும் ஔடதங்கள் , சிறைச்சாலைக்கான பொறுப்பு உத்திாயகத்தர், அரச சார்பற்ற நிறுவணங்கள், சிறுவர் பாதுகாப்புக்கான பொறுப்பு உத்தியோகத்தர். பெண்கள் அபிவிருத்திக்கான உத்தியோகத்தர் பொலீஸ் பிரதிப் பொறுப்பதிகாரி நசீர், உளநலம் சம்பந்தப்பட்ட வளவாளர்கள் ஆகியோரின் பங்களிப்புடன் ஒருங்கிணைக்கப்பட்ட சேவையினை வழங்குவதற்கு பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டு அமூல்படுத்தப்படவுள்ளது.
உதாரணமாக
1.உளநல பாதிப்புக்குட்பட்டவர்களின் பிள்ளைகளுக்கு பாதுகாப்பையும் மற்று கல்விலையத் தொடர்வதற்குரிய வசதிகளையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அனுசரணைகளுடன் நிறைவேற்றல்.
2.வைத்தியசாலையில் உளநல சேவைக்கு அப்பால் மேற்கூறிய உத்தியோகத்தர்களின் சேவையினை தேவைப்படும்போது அவ் உத்தியோகத்தர்களின் அனுசரணையுடன் கலந்துரையாடல் நடாத்தப்பட்டு தீர்வுகாணல். உதாரணம் பாலியல் ரீதியான வண்முறை, சிறுவர் துஸ்பிரயோகம் ஆகியன.
3. உளநலம் பாதிப்புக்குட்பட்டவர்களில் சிலர் கிளினிக்கிற்கு வராமல் இருப்பவர்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளினுாடாக அடையாளம் கண்டு அவர்களை வரவழைத்தல் அல்லது குறித்த நோயாளியின் இடத்திற்குச் சென்று சிகிச்சையழித்தல்.
4.பாடசாலை செல்லும் சிறுவர்களுக்கான போதைப்பொருள் பாவனை சம்பந்தமான அறிவுறுத்தப்படும் நடவடிக்கையாக பெற்றோருக்கு தெிளிவுட்டல் நிகழ்ச்சித்திட்டம்.
இப்படிக்கு,
டாக்டர் கலாநிதி ஏ . இஸ்ஸடீன்,
வைத்திய அத்தியட்சகர்,
ஆதார வைத்தியசாலை,
சம்மாந்துறை.