5 ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடையும் மாணவர்களுக்கு வழங்கப்படும் 500 ரூபாய் உதவித்தொகையை, 750 ரூபாயாக அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
பொருளாதார பிரச்சினைக்கு மத்தியில் புலமை பரிசில் பரீட்சையில் தோற்றி சித்தியடைந்த மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்காக இவ்வாறு மாதாந்த உதவித் தொகை வழங்கப்படுகின்றது. பல வருடங்களாக அதிகரிப்பு செய்யப்படாத நிலையில், அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்துக்கு நேற்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது.