ஐக்கிய அரபு அமீரகத்தில் வாகனம் ஓட்டும் அனைவருக்குமான முக்கிய அறிவுரை ஒன்றை சம்மாந்துறை24 இணையத்தளம் வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறது.
தற்போது ரமழான் விடுமுறை-ஹஜ் விடுமுறைகள் என அனைத்து விடுமுறைகளும் நிறைவுற்ற நிலையில் டுபாயில் பாடசாலைகள் ஆரம்பித்துள்ளதனை தாங்கள் அனைவரும் அறிவீர்கள்.
யாராவது பாடசாலையை அண்மித்த பகுதிகளில் வேகமாக வானம் ஓட்டிச் சென்றாலோ, அல்லது பாடசாலை வாகணங்களுக்கு வழிவிடாது மறித்து நின்றாலோ, அல்லது பாடசாலை வாகணங்களில் பொருத்தப்பட்டிருக்கும் சிக்னல்களை மீறினாலோ அல்லது வீதிகளில் ட்ரெக் மாறி மாறி வாகணத்தை ஓட்டிச் சென்றாலே உடனடியாக 1000 திர்ஹம் தண்டப் பணம் அறவிடப்படுவதாகும் அத்தோடு 10 கருப்பு பொயிட் மார்க்க பதியப்படுவதாகவும் டுபாய் பொலிசார் அறிவித்துள்ளனர்.