Ads Area

பாடசாலை மாணவர்களுக்கு உடல் ரீதியான தண்டனைகள் வழங்குவது தடை செய்யப்படும்.

அரச பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு உடல் ரீதியான தண்டனைகள் வழங்குவது தடை செய்யப்படும் என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

நாம் மனிதர்களாக முன்னேறிச் செல்வது அவசியம். அந்த வகையில் எமது பிள்ளைகள் மிலேச்சத்தனமானவர்களாக வளர்ந்து விடக் கூடாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சட்டக் கல்வியை பாடசாலைக் கல்வியில் உட்படுத்துவது தொடர்பில் அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது. அது தொடர்பான நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டு வருகின்றோம். ஆறு மற்றும் ஒன்பதாம் வகுப்புகளில் ஆரம்பித்து க. பொ. த. உயர் தரத்தில் இதனை ஒரு பகுதியாக நாம் உட்படுத்தவுள்ளோம்.


மக்கள் நாட்டிலுள்ள சட்டங்களை அறியாமல் உள்ளனர். அதனால்தான் தவறிழைக்கின்றனர். அதனால் சிறைச்சாலைகளே நிரம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரத்தினபுரி கஹவத்தை ஆரம்ப பாடசாலையில் இரண்டு மாடிக்கட்டிடத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe