காதலித்த காரணத்தால் இந்தியாவில் இளம் பெண் ஒருவரை அரை நிர்வாணமாக்கி அடித்துக் கொடூரம்.
மத்திய பிரதேச மாநிலத்தில் மாற்று சாதியை சேர்ந்தவரை காதலித்ததால், இளம் பெண்ணை அரை நிர்வாண கோலத்தில் கிராமத்தினர் அடித்து துன்புறுத்திய கொடூரம் அரங்கேறியுள்ளது.
ஆனால், இதுவரை போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை என புகார் எழுந்துள்ளது. இதனை அடுத்து விளக்கம் அளித்துள்ள அலிராஜ்பூர் காவல் கண்காணிப்பாளர் விபுல் ஸ்ரீவத்சவா, இளம்பெண் அடித்து துன்புறுத்தப்பட்டது தொடர்பாக எந்த புகாரும் வரவில்லை என்றும், வீடியோ காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.