அம்பாறையில் இருந்து திருகோணமலை நோக்கிச் சென்று கொண்டிருந்த சொகுசு பஸ் ஒன்று சம்மாந்துறை ஆண்டியடி சந்தியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தின் போது சாரதி காயமடைந்ததாகவும், சிலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறைப் பொலிசார் மேற்கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.