சம்மாந்துறை பிர்லியன்ட் பாலர் பாடசாலையின் வருடாந்த பாராட்டு விழா பாடசாலை வளாகத்தில் அண்மையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிர்லியன்ட் பாலர் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதோடு மாணவர்களுக்கு பாராட்டுக்களையும் பரிசுப் பொருட்களையும் கௌரவ அஸ்மி யாசீன் அவர்கள் வழங்கி வைத்தார்கள்.
அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் என பலரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.